உள்ளடக்கத்துக்குச் செல்

சிலந்தி வலை நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலந்தி வலை நடவடிக்கை
பகுதி: உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் போது உருசியாவில் நடந்த தாக்குதல்களின் ஒரு பகுதி
சிலந்தி வலை நடவடிக்கை is located in உருசியா
Olenya air base
Olenya air base
Ivanovo air base
Ivanovo air base
Belaya air base
Belaya air base
Dyagilevo air base
Dyagilevo air base
Ukrainka air base
Ukrainka air base
உருசியாவிற்குள் குறிவைக்கப்பட்ட வான்படைத் தளங்களின் இருப்பிடம்
இடம்
ஒலெஸ்னியா, தியாகிலெவோ, இவானோவோ, பெலாயா, உக்ரைங்கா விமான தளங்கள், உருசியா
நோக்கம்உருசிய வான்படை
தேதி1 சூன் 2025 (2025-06-01)
செய்து முடித்தவர்உக்ரைன் பாதுகாப்பு சேவை
விளைவு41 உருசிய இராணுவ விமானங்கள் தாக்கப்பட்டன (எஸ்.பி.யு. இன் படி)
குறைந்தது 13 உருசிய இராணுவ விமானங்கள் தாக்கபட்டன (ஒசிண்டின் படி)[1]

சிலந்தி வலை நடவடிக்கை (Operation Spider's Web, உக்குரைனியம்: Операція «Павутина», romanized: Operatsija "Pavutyna" ) என்பது உருசிய-உக்ரைன் போரின் போது, 2025 சூன் 1 அன்று உருசியாவிற்குள் உக்ரைன் பாதுகாப்பு சேவையால் (SBU) நடத்தப்பட்ட ஒரு இரகசிய ஆளில்லா வானூர்திப்போராகும். இந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களில் பெலாயா, டயகிலெவோ, இவானோவோ செவர்னி, ஒலென்யா, உக்ரைங்கா ஆகிய ஐந்து விமானத் தளங்களில் உள்ள உருசிய வான்படையின் நீண்ட தூர வானூர்தி போக்குவரத்து சொத்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. உருசிய பிரதேசத்திற்குள் சுமையுந்துகளில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி இவை நடத்தப்பட்டன.

போரில் இதுவரை உருசிய வான்படைத் தளங்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆளில்லா வானூர்தி தாக்குதல் இதுவாகும். உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி 117 ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி, 40 இக்கும் மேற்பட்ட வானூர்திகள் சேதப்படுத்தப்பட்டன. தாக்குதல் நடந்ததை உருசியா உறுதிப்படுத்தியது. இந்த தாக்குதல் நடவடிக்கையானது இதற்கு முன் இல்லாத புவியியல் எல்லைப் பரப்பிற்காக குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இது ஐந்து நேர மண்டலங்களில் ஐந்து மாகாணங்களை உள்ளடக்கிய பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. [2] குறிப்பாக கிழக்கு சைபீரியாவில் உள்ள பெலாயா வானூர்தி தளத்தின் மீதான தாக்குதல், உக்ரைனில் இருந்து 4,300 கிமீ (2,700 மைல்) தொலைவில் உள்ள இந்த தளத்தில் சேதம் உறுதி செய்யப்பட்டது. [3] கட்டற்ற மூல புலனாய்வு (OSINT) ஆய்வாளர்களின் கூற்றுப்படி, செயற்கைக்கோள் படங்கள் மற்றும் காணொளிகளின் அடிப்படையில் இரண்டு தளங்களில் குறைந்தது 13 இராணுவ விமானங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

தயாரிப்பு

[தொகு]
உருசிய இராணுவ விமானநிலையங்களின் செயற்கைக்கோள் படங்களை (கடிகாரச்சுற்று: ஒலென்யா, இவானோவோ செவர்னி, உக்ரைங்கா, பெலாயா மற்றும் டியாகிலெவோ) மற்றும் மூலோபாய குண்டுவீச்சு விமானங்களான டி.யு-95எம்.எஸ் (இடது) மற்றும் டி.யு-22எம்3 (வலது) ஆகியவற்றின் புகைப்படங்களை உக்ரைன் பாதுகாப்பு சேவையின் தலைவர் வாசில் மல்யுக் பார்க்கிறார்.

தாக்குதலைத் திட்டமிடத் தொடங்கியதிலிருந்து அதைச் செயல்படுத்த 18 மாதங்கள், 9 நாட்கள் ஆனது என்று வலோதிமிர் செலேன்சுக்கி கூறினார்.[4] இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவிற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அமெரிக்க மற்றும் உக்ரைன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.[5] [6] உக்ரேனிய வட்டாரங்களின்படி, "மிகவும் சிக்கலான" இந்த நடவடிக்கைக்கான திட்டம் [7] உக்ரைன் பாதுகாப்பு சேவையின் (SBU) தலைவர் வாசில் மல்யுக்காலும் அவரது ஊழியர்களால் செயல்படுத்தப்பட்டது. மேலும் இதன் முன்னேற்றம் ஜெலென்ஸ்கியால் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடப்பட்டது. [8]

இந்த ஆளில்லா வானூர்திகள் அதிக சுமைகளைக் கொண்ட எளிய வகையினவாக இருந்தன. [9] அவை உருசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டன, தோராயமாக 36 மரப் பெட்டிகளில் கொண்டு செல்லப்பபட்ட இவை அகற்றக்கூடிய கூரைகள் கொண்ட வண்டிகளுக்கு மாற்றப்பட்டன. அவை வழக்கமாக தார்பாய் இல்லாமல் லாரிகளில் கொண்டு செல்லப்படன.[10] [11] தாக்குதல் திட்டமிடப்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில், இந்த கொள்கலன்களின் கூரைகள் தொலைக் கட்டுப்பாட்டில் திறக்கப்பட்டு, ஆளில்லா வானூர்திகள் அவற்றின் இலக்குகளை நோக்கி பறக்கவிடப்பட்டன.[12] [7]

ஒவ்வொரு ஆளில்லா வானூர்திக்கும் தொலைதூரத்தில் இருந்து ஏவவும் கட்டளையிடவும் தனித்தனியாக விமானிகள் இருந்ததாக ஜெலென்ஸ்கி கூறினார்.[9] இந்த ஆளில்லா வானுர்திகள் கட்டற்ற மூல மென்பொருளான அர்டுபைலட் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன. [13] உருசியப் பிரதேசத்தில் தாக்குதல் நடவடிக்கைக்கு உதவிய முகவர்கள் தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பே வெளியேற்றப்பட்டதாக உக்ரைனிய வட்டாரங்கள் தெரிவித்தன.[14]

தாக்குதல்கள்

[தொகு]
தாக்கப்பட்ட தளங்களில் ஒன்றில் டி.யு-95 ரக விமானங்களை எரித்தல்.

117 உக்ரேனிய ஆளில்லா வானூர்திகள் பெலாயா, டயகிலெவோ, இவானோவோ செவர்னி, ஒலென்யா, [15] உக்ரைங்கா . [16] [17] என ஐந்து உருசிய வான்படைத் தளங்களை குறிவைத்தன. டி.யு-160, டி.யு-95, டி.யு -22எம் தந்திரோபாய குண்டுவீச்சு வானூர்திகள் மற்றும் ஏ-50 வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு வானூர்தி உட்பட 40க்கும் மேற்பட்ட உருசிய இராணுவ விமானங்களைத் தாக்கியதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை கூறுகிறது. [18] தாக்குதல்களைத் தொடர்ந்து, ஏங்கெல்ஸ் மற்றும் மொரோசோவ்ஸ்க் விமானத் தளங்களுக்கு வான்வழி அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், உருசிய அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்தனர். [19]

பின்விளைவு

[தொகு]

இந்த தாக்குதல்களில் உருசியாவின் தந்திரோபய குண்டு வீச்சு வானூர்திகளில் மூன்றில் ஒரு பங்கு சேதப்படுத்தப்பட்டதாகவும், இதன் மதிப்பு US$7 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனுக்குள் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானைர்திகளை ஏவுவதற்கான உருசியாவின் திறன் குறைந்தபட்சம் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும் என்று போர் ஆய்வு நிறுவனம் அதன் ஆரம்ப பகுப்பாய்வில் குறிப்பிட்டது. [20] இவற்றில் பனிப்போர் கால மூலோபாய அணு குண்டுவீச்சு வானூர்திகளின் டுபோலேவ் வகையும் அடங்கும். எனவே உருசியாவின் குண்டுவாச்சுத் திறனின் ஒரு பகுதியை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. தாக்குதல்களைத் தடுப்பதில் உளவுத்துறை ஆடைந்த தோல்வியானது புதினின் மனதை பாதிக்கும். மேலும் உருசியாவின் உள்நாட்டு உளவுத்துறை சேவையில் களையெடுப்புக்கு வழிவகுக்கும் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியது. சில வர்ணனையாளர்களும் உருசிய இராணுவ வலைப்பதிவர்களும் இந்த நிகழ்வை உருசியாவின் பேர்ள் துறைமுகத் தாக்குதல் என்று குறிப்பிட்டனர்.

உருசிய பாதுகாப்பு அமைச்சகம் இந்த நடவடிக்கையை "பயங்கரவாத தாக்குதல்" என்று குறிப்பிட்டது. [21] உருசியாவின் ஐந்து பிராந்தியங்களில் வான்படைத் தளங்கள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டு, ஆனால் மூன்று பிராந்தியங்களில் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகக் கூறியது. [5] இது ஒலென்யா மற்றும் பெலாயா வான்படைத் தளங்களில் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியது. [2]

தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு சுமையுந்து (லாரி) ஓட்டுநர் காவல் துறையினரின் விசாரணை வளையத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக உருசியாவின் டாஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. [22] மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்க் பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், தாக்குதலுக்கு உதவிய பல "பங்கேற்பாளர்கள்" கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உருசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது, இருப்பினும் அனைத்து செயல்பாட்டாளர்களும் உருசியாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாக ஜெலென்ஸ்கி கூறினார். [9] [11] உருசிய பாதுகாப்புச் சேவைகளுடன் தொடர்பு கொண்டதற்காக அறியப்பட்ட உருசிய டெலிகிராம் சேனலான பாஸாவின் சரிபார்க்கப்படாத செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி, ஆளில்லா வானுர்திகளை ஏற்றிச் சென்ற சுமையுந்து ஓட்டுநர்கள் அனைவரும் மரத்தாலான பெட்டகங்களை அப்பாவித்தனமாக கொண்டு சென்றது, சுமையுந்துகளை எங்கு நிறுத்துவது என்பது குறித்த வழிகாட்டல்களைப் பெற்றது போன்ற ஒத்த கதைகளைச் சொன்னதாகக் கூறியது. உருசிய அரசு செய்தி நிறுவனமான ரியா நோவோஸ்டியால் பேட்டி காணப்பட்ட ஒரு ஓட்டுநர், தானும் மற்ற ஓட்டுநர்களும் எழுந்து பறந்து வரும் ஆளில்லா வானூர்திகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும், கற்களை எறிந்து அவற்றை வீழ்த்த முயன்றதாகவும் கூறினார்.[9]

பகுப்பாய்வு

[தொகு]

பைனான்சியல் டைம்ஸ் இதழின் கூற்றின்படி, சேதமடைந்த மற்றும் அழிக்கப்பட்ட வானூர்திகள் உருசியாவின் நீண்ட தூர விமானக் குழுவில் சுமார் 20% ஆகும். தாக்குதலுக்கு உள்ளான பல விமான வகைகள், டி.யு-95, டி.யு-22M3 போன்றவை. இவை 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து தயாரிக்கப்படவில்லை, இதனால் அவற்றை மாற்றுவது மிகவும் கடினமாகும் ( 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி நவீனமயமாக்கப்பட்ட டி.யு-160M உற்பத்தியில் உள்ளது, மேலும் புதுப்பிக்கப்பட்ட ஏ-50U திட்டமிடலில் உள்ளது [23] ). இராணுவ நிபுணர் வில்லியம் ஆல்பெர்க்கின் கூற்றுப்படி, இந்த இழப்புகளில் இருந்து மீள பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்கள் கூட ஆகலாம். இந்தத் தாக்குதல்கள் உக்ரைன் மீது உருசியா பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தும் திறனைக் குறைக்கும் என்றும் அல்பெர்க் கூறினார். [24]

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரையாளர் பெர்னார்ட்-ஹென்றி லெவி இந்த நடவடிக்கையை ஹிஸ்புல்லா போராளிகள் மீதான இஸ்ரேலின் அகவித் தாக்குதல்களுடன் ஒப்பிட்டு, வரலாற்றில் மிகவும் புத்திசாலித்தனமான இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகவும், பல நூற்றாண்டுகளாக ஆய்வு செய்யப்படும் நடவடிக்கை என்றும் விவரித்தார். [25]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Romashenko, Sergei (2 June 2025). "После атаки ВСУ подтверждено поражение 13 самолетов РФ" (in ru). https://www.dw.com/ru/posle-ataki-vsu-podtverzdeno-porazenie-13-samoletov-strategiceskoj-aviacii-rf/a-72757803.
  2. 1 2 Varenikova, Maria; Kuznietsova, Anastasia; Vasilyeva, Nataliya (1 June 2025). "Ukraine Drone Strike Targets Russian Air Bases in Large-Scale Attack". https://www.nytimes.com/2025/06/01/world/europe/russia-ukraine-strikes.html.
  3. ↑ "Ukrainian drones target Russian airbases in unprecedented operation". 1 June 2025. https://www.aljazeera.com/news/2025/6/1/ukrainian-drones-target-russian-airbases-in-unprecedented-operation.
  4. ↑ Vakulina, Sasha (1 June 2025). "'Operation Spiderweb': How Ukraine destroyed over a third of Russian bombers". Euronews. https://www.euronews.com/2025/06/01/operation-spiderweb-how-ukraine-destroyed-over-a-third-of-russian-military-aircraft.
  5. 1 2 Ravid, Barak (2025-06-01). "Ukraine launches massive drone strike on air bases deep inside Russia". Axios. https://www.axios.com/2025/06/01/ukraine-drone-strikes-russia.
  6. ↑ Jacobs, Jennifer (1 June 2025). "Ukraine claims drone attack hit 40 Russian bombers as talks set to resume in Turkey". CBS News. https://www.cbsnews.com/news/ukraine-russia-drone-attacks-ceasefire-talks-turkey/.
  7. 1 2 Kapustianska, Ivanna (1 June 2025). "FPV сховали під дахи мобільних будиночків: деталі про історичну операцію СБУ 'Павутина'". LB.ua. https://lb.ua/society/2025/06/01/679517_fpv_shovali_pid_dahi_mobilnih.html.
  8. ↑ "Deadly 'Spiderweb': How Ukraine destroyed 40 Russian jets in historic behind-the-lines op". RBC-Ukraine. 1 June 2025. https://newsukraine.rbc.ua/news/deadly-spiderweb-how-ukraine-destroyed-40-1748792204.html.
  9. 1 2 3 4 Gozzi, Laura (2 June 2025). "BBC Verify: How Ukraine carried out daring 'Spider Web' attack on Russian bombers". BBC News. https://www.bbc.co.uk/news/articles/cq69qnvj6nlo.
  10. ↑ "Ukraine claims drone attack hit 40 Russian bombers as talks set to resume in Turkey". 2025-06-02. https://www.cbsnews.com/news/ukraine-russia-drone-attacks-ceasefire-talks-turkey/.
  11. 1 2 Mazhulin, Artem (2 June 2025). "Operation Spiderweb: a visual guide to Ukraine's destruction of Russian aircraft". https://www.theguardian.com/world/2025/jun/02/operation-spiderweb-visual-guide-ukraine-drone-attack-russian-aircraft.
  12. ↑ "Спецоперацію «Павутина» готували понад півтора року – джерело". 1 June 2025. https://www.ukrinform.ua/rubric-ato/3999440-specoperaciu-pavutina-gotuvali-ponad-pivtora-roku-dzerelo.html.
  13. ↑ Hiltscher, Johannes (3 June 2025). "Die Software hinter Operation Spinnennetz" [The software behind Operation Spiderweb]. Golem.de (in ஜெர்மன்). Retrieved 2025-06-03.
  14. ↑ "Знищення 41 літака стратегічної авіації РФ. Як готували спецоперацію 'Павутина'". 1 June 2025. https://texty.org.ua/fragments/115198/znyshennya-41-litaka-stratehichnoyi-aviaciyi-rf-yak-hotuvaly-specoperaciyu-pavutyna-foto/.
  15. ↑ Adams, Paul; Lukiv, Jaroslav (1 June 2025). "Ukraine drones strike bombers during major attack in Russia" (in en). https://www.bbc.com/news/articles/c1ld7ppre9vo.
  16. ↑ Zoria, Yuri (2 June 2025). "Trojan truck op: Kyiv destroys '34%' of Russia's strategic bomber fleet within hours with truck-launched FPV drones". https://euromaidanpress.com/2025/06/02/trojan-truck-attack-ukraine-used-ai-trained-fpv-drones-launched-from-trucks-to-destroy-34-of-russias-strategic-bomber-fleet-in-a-day/.
  17. ↑ Orlova, Alisa; Zakharchenko, Kateryna (1 June 2025). "'Spiderweb' Strikes Cripple 34% of Russian Bomber Fleet in $7 Billion Blow, SBU Confirms". https://www.kyivpost.com/post/53749.
  18. ↑ "Ukraine reportedly strikes down over 40 Russian strategic bombers" (in en). 1 June 2025. https://www.euronews.com/2025/06/01/ukraine-reportedly-strikes-down-over-40-russian-strategic-bombers-in-mass-drone-attack.
  19. ↑ Kostenko, Viktor (1 June 2025) (in uk) இம் மூலத்தில் இருந்து 1 ஜூன் 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250601192045/https://www.dsnews.ua/ukr/world/shche-tri-rosiyski-viyskovi-aerodromi-pid-dronovoyu-atakoyu-01062025-522883.
  20. ↑ Gibson, Olivia; Harvey, Anna; Novikov, Daria; Harward, Christina; Stepanenko, Kateryna (June 1, 2025). "Russian Offensive Campaign Assessment, June 1, 2025" (in ஆங்கிலம்). Institute for the Study of War. Retrieved 2 June 2025.
  21. ↑ "Russia confirms Ukraine carried out drone attacks on airfields". பிபிசி. 1 June 2025 இம் மூலத்தில் இருந்து 1 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20250601153826/https://www.bbc.com/news/live/cgrg7kelk45t?post=asset:6f21bb15-cc34-42a5-a466-9ddf4d50e57b%23post.
  22. ↑ "Russian authorities detain truck driver thought to be involved in attack". பிபிசி. 1 June 2025 இம் மூலத்தில் இருந்து 1 June 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20250601153826/https://www.bbc.com/news/live/cgrg7kelk45t?post=asset:6f21bb15-cc34-42a5-a466-9ddf4d50e57b%23post.
  23. ↑ "Rostec Wants to Resume Production of A‑50U AEW&C Systems But New Aircraft Won't Be Ready Any Soon, History Shows". Defense Express. 2 March 2024. https://en.defence-ua.com/industries/rostec_wants_to_resume_production_of_a_50u_aewc_systems_but_new_aircraft_wont_be_ready_any_soon_history_shows-9703.html.
  24. ↑ "'An epic failure': Russia reels from surprise Ukrainian attack on bomber fleet". 3 June 2025. https://www.ft.com/content/132e4327-11da-4412-b36b-7363604879e6.
  25. ↑ Lévy, Bernard-Henri (3 June 2025). "Drone Attack Shows Why Ukraine Will Win This War". The Wall Street Journal. https://www.wsj.com/opinion/ukraine-will-win-this-war-drone-attack-in-russia-d74759ac?mod=hp_opin_pos_5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலந்தி_வலை_நடவடிக்கை&oldid=4586413" இலிருந்து மீள்விக்கப்பட்டது