சிலந்தி ஆமை
| சிலந்தி ஆமை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| பேரினம்: | பைசிசு
|
| இனம்: | பை. அராக்னோயிடுசு
|
| இருசொற் பெயரீடு | |
| பைசிசு அராக்னோயிடுசு பெல், 1827 | |
| வேறு பெயர்கள் [3] | |
| |
சிலந்தி ஆமை (Spider tortoise) எனும் பைசிசு அராக்னோயிடுசு என்பது டெசுடூடினிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆமை சிற்றினமாகும். இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். பைக்சிசு பேரினத்தில் உள்ள இரண்டு சிற்றினங்களில் ஒன்றாகும்.[4]
வாழ்விடம்
[தொகு]இந்த ஆமைகள் தென்மேற்கு மடகாசுகரில் மட்டுமே காணப்படுகின்றன. இங்கு இவை கடலோரப் மணல் பகுதிகளின் முட்தாவரங்களில் வாழ்கின்றன.
வாழ்க்கைச் சுழற்சியும் இனப்பெருக்கமும்
[தொகு]இந்த ஆமைகள் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்று நம்பப்படுகின்றன. இது அருகிய ஆமை. மிகக் குறைவாகவே இதனுடைய இனப்பெருக்கம் குறித்து அறியப்படுகிறது.[5] இவை இளம் இலைகள், பூச்சி இளம் உயிரிகள், பெரிய விலங்குகளின் எச்சங்களையும் உண்கின்றன. ஈரமான காலங்களில் செயலற்று காணப்படும். இக்காலம் முடிந்த பின்னர் ஆமைகள் இனச்சேர்க்கை செய்யத் தொடங்குகின்றன. பெண் இனப்பெருக்க காலத்தில் ஒரு முட்டையை மட்டுமே இடும். மேலும் முட்டையானது சுமார் 220-250 நாட்களுக்கு அடைகாக்கப்படுகிறது. செல்லப்பிராணி வர்த்தகம், உணவுக்காக வேட்டையாடுதல் மற்றும் வாழிட அழிவு ஆகியவை ஆமை எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் ஆகும்.
பாதுகாப்பு
[தொகு]சிலந்தி ஆமையின் வர்த்தகம் மடகாசுகரில் சட்டவிரோதமானது.[6] ஆனால் இவை உணவு, உடல் பாகங்கள் மற்றும் சட்டவிரோத செல்லப்பிராணிகளுக்காக பரவலாக கடத்தப்படுகின்றன.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Leuteritz, T.; Walker, R. (2020). "Pyxis arachnoides". IUCN Red List of Threatened Species 2020. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T19035A177075588.en. https://www.iucnredlist.org/species/19035/177075588. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. Retrieved 2022-01-14.
- ↑ Fritz Uwe; Peter Havaš (2007). "Checklist of Chelonians of the World". Vertebrate Zoology 57 (2): 292–293. doi:10.3897/vz.57.e30895. பன்னாட்டுத் தர தொடர் எண்:1864-5755.
- ↑ Glaw, Frank; Vences, Miguel (2007). A Field Guide to the Amphibians and Reptiles of Madagascar (3rd ed.). Cologne, Germany: Vences & Glaw Verlags. ISBN 978-3-929449-03-7.
- ↑ 5.0 5.1 Leuteritz, T.; Walker, R. (2014). "Pyxis arachnoides". IUCN Red List of Threatened Species 2014. doi:10.2305/IUCN.UK.2014-1.RLTS.T19035A50987297.en. https://www.iucnredlist.org/species/19035/50987297. பார்த்த நாள்: 10 January 2020.
- ↑ "Malagasy Frontier Police seize Indonesia-bound shipment of 'world's rarest' tortoises - Wildlife Trade News from TRAFFIC".
7. Walker, Ryan C. "The decline of the critically endangered northern Madagascar spider tortoise (pyxis arachnoides brygooi)." Herpetologica, vol. 66, no. 4, Dec. 2010, pp. 411–417, https://doi.org/10.1655/09-047.1.