சிற்றெலி
சிற்றெலிகள் (Mole) என்பன நிலத்திற்கு அடியில் வளைகளில் வாழத் தகவமைத்துக்கொண்ட சிறிய பாலூட்டிகளாகும். இவற்றின் உடல் உருண்டையாகவும் பட்டுப் போன்ற மென்மயிர்களையும் கொண்டிருக்கும். இவற்றின் கண்களும் காதுகளும் சட்டென்று கண்ணுக்குத் தெரியாததாகவும் சிறிதாகவும் இருக்கும். பின்னங்கால்கள் குன்றியும் முன்னங்கால்கள் குட்டையாக இருப்பினும் வளை தோண்ட ஏதுவாக வலுவாகவும் இருக்கும்.
சிற்றெலி என்பது பொதுவாக வட அமெரிக்கா[1], ஆசியா, ஐரோப்பாவில் காணப்படும் தால்ப்பிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளையே குறிக்கும்.
இவை பொதுவாக வளைதோண்டி சிறு மண்மேடுகளை ஏற்படுத்தும்.
இயல்புகள்
[தொகு]நிலத்திற்கடியில் மூச்சுவிடல்
[தொகு]மற்ற விலங்குகளை விட சிற்றெலிகளால் அதிகமான கார்பன் டை ஆக்சைடு உள்ள சூழலில் தாக்குப்பிடிக்க முடியும். இவற்றின் குருதியில் உள்ள ஒரு சிறப்பான ஈமோகுளோபின் ஆக்சிசனை நன்கு ஈர்த்து வைத்துக் கொள்வதே காரணமாகும். மேலும் சிற்றெலிகள் வெளிவிட்ட மூச்சுக் காற்றினைக் கூட பயன்படுத்தி ஆக்சிசனைப் பெறவியலும். இதனால் இவற்றால் ஆக்சிசன் குறைந்த சூழலிலும் வாழ முடிகிறது.[2]
கூடுதல் கட்டைவிரல்கள்
[தொகு]சிற்றெலிகளுக்கு இயல்பான கட்டைவிரலுக்கு அடுத்து ஒரு கூடுதல் கட்டைவிரலும் உள்ளது.
உணவு
[தொகு]மண்புழுக்களே இவற்றின் முதன்மையான உணவு. மேலும் மண்ணுக்குள் காணப்படும் மற்ற சிறு முதுகெலும்பில்லா உயிர்களையும் இவை உண்கின்றன. வளைக்குள் விழுந்த மண்புழுக்களை நன்றாக மோப்பம் பிடித்து ஓடி வந்து அவற்றை உண்கின்றன. மேலும் இவற்றின் எச்சிலில் உள்ள ஒரு வகை நஞ்சு மண்புழுக்களை முடக்கி விடுகின்றனது. இதனால் சிற்றெலிகளால் இரையைக் கொல்லாமல் வைத்திருந்து வேண்டும் போது தின்ன முடிகிறது. சில வளைகளில் இவ்வாறு ஆயிரத்திற்கும் அதிகமான மண்புழுக்கள் உயிருடன் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
நட்சத்திர வடிவ மூக்குடைய மோலினால் மனிதனால் பார்வையில் தொடர்வதை விடக் கூடுதலான வேகத்தில் இரையைத் தேடிப் பிடித்து தின்று விட முடியும்.[3]
தோலும் மென்மயிரும்
[தொகு]இவற்றின் மென்மயிர் பட்டுப் போல மென்மையானது. மேலும் தரைவாழ் விலங்குகளைப் போல ஒரு பக்கமாக சாய்ந்திருப்பதில்லை. எனவே சிற்றெலிகளால் வளைக்குள் பின்புறமும் எளிதாகச் செல்ல முடியும். எந்தப் பக்கம் தடவினாலும் மென்மையாக இருக்கும் தன்மையினால் மனிதர்களால் தோலணிகள் செய்ய விரும்பப் பட்டது. அலெக்சாந்திரா என்னும் அரசி ஒருவர் மோலின் தோலினால் செய்த அலங்கார ஆடைகளை அணிந்தமையால் மக்கள் இவற்றை விரும்பி வாங்கத் தொடங்கினர். இதனால் மனிதர்களுக்கு தோட்டங்களில் உள்ள உழவர்களுக்கு நன்மை செய்யக் கூடிய மண்புழுக்களை உண்பதன் மூலம் இடைஞ்சலாக எண்ணப்பட்ட சிற்றெலிகள் அவற்றின் தோலின் மதிப்புக் காரணமாக விரும்பப் பட்டன. தோலும் மென்மயிரும் கரும்பழுப்பு நிறத்தில் இருந்தாலும் வேண்டிய வண்ணத்தில் சாயமேற்ற முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Campbell, Kevin. "Mole Distribution Maps". University of Manitoba. Archived from the original on 24 மார்ச்சு 2010. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச்சு 2010.
- ↑ "Secret of how moles breathe underground revealed". The Telegraph. 20 July 2010 இம் மூலத்தில் இருந்து 23 July 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100723133025/http://www.telegraph.co.uk/science/science-news/7899216/Secret-of-how-moles-breathe-underground-revealed.html. பார்த்த நாள்: 19 August 2016.
- ↑ Salisbury, David F. (2 பெப்பிரவரி 2005). "Marsh-dwelling mole gives new meaning to the term 'fast food'". EurekAlert. Archived from the original on 16 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2016.