சிற்றுண்டிச்சாலை

சிற்றுண்டிச்சாலை (cafeteria) என்பது குறைவான பரிமாறுநர்கள் அல்லது பரிமாறுநர்களே இல்லாத உணவுச் சேவை வழங்கும் இடமாகும். அமெரிக்க ஆங்கிலத்தில் பள்ளியில் உள்ள உணவருந்துமிடம், மதிய உணவு அறை என்றும் குறிப்பிடப்படுகிறது. [1] சிற்றுண்டிச்சாலைகள் குளம்பியகங்களிலிருந்து வேறுபட்டவை, இருப்பினும் இந்தச் சொல் எசுப்பானிய வார்த்தையான கஃபேட்டீரியாவிலிருந்து வந்தது.
வரலாறு
[தொகு]
அமெரிக்காவின் முதல் சுய சேவை உணவகம் (சிற்றுண்டிச்சாலையாக இல்லாமல் இருந்திருக்கலாம்) நியூயார்க் நகரில் உள்ள எக்ஸ்சேஞ்ச் பஃபே ஆகும். இது செப்டம்பர் 4, 1885 இல் திறக்கப்பட்டது. மேலும், ஆண் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்தச் சேவை கிடைத்தது. உணவு ஒரு வழங்கிடத்தில் வாங்கிய பின்னர், வாடிக்கையாளர்கள் நின்று கொண்டே சாப்பிட்டனர். [2]
கல்லூரிச் சிற்றுண்டிச்சாலை
[தொகு]கல்லூரிச் சிற்றுண்டிச்சாலைகளுக்கானக் கட்டணம் செலுத்தும் முறை பொதுவாக உணவுத் திட்டத்தின் வடிவத்தில் இருக்கும். இதன்படி மாணவர்கள் பருவத்தின் தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவார். இவை, கணினியில் சேமிக்கப்படும். உணவுத் தேர்வுகளை மாணவர்கள் ஒரு வாரத்திற்கு அல்லது பருவத்திற்கு தேர்வு செய்யலாம். தேவை எனில் அந்தக் காலத்திற்குப் பிறகு மாற்றிக்கொள்ளலாம். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lunchroom". Merriam Webster. Retrieved 2019-09-12.
- ↑ John F. Mariani, America Eats Out, William Morrow & Co (October 1991), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-688-09996-1
- ↑ "Helping Your College Student Select a Meal Plan". collegeparents. Archived from the original on 2011-07-15.