சிற்பி (இதழ்)
சிற்பி | |
---|---|
துறை | சிறுவர் சித்திரப் பத்திரிகை |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | இரா. செயக்குமார் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகத்தார் | இரா. செயக்குமார் (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | திங்கள் இதழ் |
சிற்பி என்னும் சிறுவர் சித்திரப் பத்திரிகை தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் நகரில் இருந்து வெளிவந்த திங்கள் இதழாகும். இவ்விதழ் இரா. செயக்குமார் என்பவரால் 1990 செப்டம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது.
ஆசிரியர் குழு[தொகு]
இவ்விதழின் ஆசிரியர், ஓவியர், வெளியிடுநர் என்னும் முப்பொறுப்புகளையும் இரா. செயக்குமார் ஏற்று வெளியிட்டார்.[1]
உள்ளடக்கம்[தொகு]
சிறுவர்களுக்கான ஓவிய இதழாக வெளிவந்த சிற்பி இதழ் சில மாதங்களே வெளிவந்து நின்றுவிட்டது. ஒவ்வொரு இதழும் 16 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது.
அரைநிமிட அரட்டை என்னும் தலையங்கம், சுட்டிச் சிம்பு என்னும் ஓவிய நகைச்சுவைத் தொடர், அறிவியல் செய்திகள், அறிவியற் சோதனைக் குறிப்புகள், பொது அறிவுத் துணுக்குகள், நகைச்சுவை துணுக்குகள், பேனா நண்பர்களின் முகவரி, தாவீது ராஜா என்னும் ஓவியக்கதைத் தொடர், ஒன்று + ஒன்று = 1 என்னும் தலைப்பில் சமூகத் தொண்டர் ஒருவரைப் பற்றிய குறிப்பு, ஓவியச் சிறுகதை, சிறுவர் பாடல்கள், பூங்கா என்னும் பல்சுவைப் பகுதி, பைபிள் மேற்கோள்கள் ஆகியவற்றைக் கொண்டதாக இவ்விதழ் வெளிவந்தது.
சான்றடைவு[தொகு]
- ↑ சிற்பி: சிறுவர் சித்திரப் பத்திரிகை; கலை 1, சிலை 1; செப்டம்பர் 1990