சிறயின்கீழ்
Appearance
(சிறையின்கீழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறயின்கீழ் (சிறயின்கீழு, சிறகின்கீழ்) ஊராட்சி, கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறயின்கீழ் வட்டத்தில் உள்ளது.[1] இது சிறையின்கீழ் மண்டல ஊராட்சிக்கு உட்பட்டது.
சீதையை இராவணன் கடத்திக் கொண்டு போனபோது, பின்தொடர்ந்து சென்றது ஜடாயு என்னும் பறவை. அது பறந்து சென்ற போது கீழே இருந்தது இந்தப் பகுதி என்பதால் சிறகின்கீழ் என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர், சிறயின்கீழ் என மருவியதாக கருதுகின்றனர்.
போக்குவரத்து
[தொகு]இந்த ஊரில் ரயில் நிலையம் உள்ளது. கடைக்காவூர்-சிறயின்கீழ்-ஆற்றிங்கல் சாலையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நிலம்
[தொகு]இது குன்று, தாழ்வான பகுதி, சமதளம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. கடினகுளம், அஞ்சுதெங்கு ஏரிகள், வாமனபுரம் ஆற்றின் பகுதி, சார்க்கரை ஆற்றின் பகுதி ஆகியன நீராதாரங்களாக உள்ளது.
ஊராட்சி வார்டுகள்
[தொகு]- குருவிஹார்
- பழஞ்சிறை
- மேல்கடைக்காவூர்
- பண்டகசாலை
- சார்க்கரை
- சிறயின்கீழ்
- வலியகடை
- கோட்டப்புறம்
- கடகம்
- ஒற்றப்பை
- பெருமாதுறை
- பொழிக்கரை
- புளுந்துருத்தி
- முதலப்பொழி
- புதுக்கரி
- வடக்கே அரயதுருத்தி
- ஆத்தலவட்டம்
- கலாபோஷிணி