சிறைபிடிக்கும் மலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வகைப்பாடு[தொகு]

அரிஸ்டோலோக்கியா கிராண்டிபுளரா
ஈ பிடிக்கும் பெரிய செடி

தாவரவியல் பெயர் : அரிஸ்டோலோக்கியா கிராண்டிபுளரா Aristolochia grandiflora


குடும்பம் : அரிஸ்டோலோக்கேசியீ (Aristolochacea)


இதரப் பெயர் : பெலிக்கான் மலர் (Pelican Flower) வாத்து மலர் (Swan Flower) பிசாசு மலர் (Goose Flower) ஈ பிடிக்கும் பெரிய செடி ஆடு தீண்டாபாணை

செடியின் அமைவு[தொகு]

படர்ந்து வளரும் கொடி. இலை இதய வடிவத்தில் இருக்கும். இக்கொடியில் பெரிய பூக்கள் வருகின்றன. பூ பறவையின் கழுத்து போல் வளைந்து இருக்கும். பார்ப்பதற்கு பெலிகான் பறவை ஓய்வு எடுக்கும் போது எப்படி இருக்குமோ அது போல் உள்ளதால் இதற்கு பெலிக்கான் மலர் என்று பெயர்.

பூவின் அமைவு[தொகு]

இப்பூவின் வெளிப்பகுதி அகன்று இதய வடிவத்திலும், வளைந்து விளிம்பு ஊதா சிவப்புடன் கூடிய நரம்புகள் உடையது. இப்பூ 1½ அடி (50 செ.மீ) விட்டமும் 3 அடி நீளத்திற்கு மேல் வாலும் தொங்கிக் கொண்டிருக்கும். ஒரே பூவில் கேசரமும், சூலகமும் இருந்தாலும் சூலகம் முன்னாடி முதிர்ச்சியடைகிறது. பூ இதழ்கள் குழாய் வடிவமானது. இதனுள் ஈட்டி போன்ற முடிகள் கீழ்நோக்கி வளைந்திருக்கும். பூவின் வாசனையால் ஈக்கள் எதிளில் உள்ளே சென்று விடும். ஈக்கள் வெளியே வர முயன்றால் ஈட்டி போன்ற முடி குத்திவிடும். ஆகையால் ஈக்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். இந்தக் காலத்தில் மகரந்தப்பைகள் ஈ மீது ஒட்டிக்கொள்ளும். மகரந்தச் சேர்க்கை முடிந்தவுடன் ஈட்டி முடிகள் வற்றிவிடும். இப்போது ஈ மலரைவிட்டு வெளியேறி வேறொரு பூவுக்குச் செல்லும்.

காணப்படும் பகுதிகள்[தொகு]

இச்செடிகள் தென் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் அதிகம் உள்ளது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறைபிடிக்கும்_மலர்கள்&oldid=3621970" இலிருந்து மீள்விக்கப்பட்டது