சிறேதொகோ தேசிய வனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறேதொகோ தேசிய வனம்
知床国立公園
அமைவிடம்ஒக்கைடோ, யப்பான்
கிட்டிய நகரம்அபசிறி
பரப்பளவு386.33 km²
நிறுவப்பட்டதுஜூன் 1, 1964

சிறேதொகோ தேசிய வனம் (கன் எழுத்து:知床国立公園 சிறேதொகோ கொகுரிட்சு கோயென்) சிறேதொகோ தீபகற்பத்தின் பெரும் பகுதியை அடைத்து அமைந்துள்ளது. யப்பானின் ஒக்கைடோ தீவின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள இப்பிரதேசம் யப்பானில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாகும். இங்கு பெரும்பாலான பகுதிகளைக் கால் நடையால் மட்டுமே அணுக முடியும். இவ்வனம் பிரவுன் கரடிகளுக்கு பிரசித்தமானதாகும். மேலும் இரசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யப்பான் உரிமை கோரும் குனசிறி தீவு இப்பிரதேசத்துக்கு அருகில் அமைந்துள்ளது. 2005 யுனெஸ்கோ இவ்வனத்தை உலக உரிமையாக அடையாளப்படுத்தியது. மேலும் குனசிறி தீவையும் சேர்த்து எல்லை கடந்த உலக உரிமை சமாதான பூங்காவாக அபிவிருத்தி செய்ய அறிவுறுத்தியது.

கடலில் இருந்தான சிறேதொகோ தேசிய வனத் தோற்றம்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறேதொகோ_தேசிய_வனம்&oldid=3244654" இருந்து மீள்விக்கப்பட்டது