சிறு முடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறு முடிச்சு

சிறு முடிச்சு (Small knot) அல்லது கீழைத்தேச முடிச்சு (Oriental knot) என்பது ஆண்களுடைய கழுத்துப்பட்டி கட்டுவதற்கான மிக எளிமையான முறையாகும். இது எளிமையான முடிச்சாக இருந்தும் இது பெருமளவுக்கு அறியப்பட்ட முடிச்சு அல்ல. இலகுவாக அவிழ்க்க முடியாமையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சுலபமாக அவிழ்க்கப்படக்கூடிய முடிச்சுக்களுடன் பழக்கப்பட்டவர்களுக்கு இந்த முடிச்சை அவிழ்ப்பது சினம் ஊட்டியிருக்கலாம். அத்துடன் கழுத்துப்பட்டியின் அகலப் பகுதிக்குப் பின்னே மறையும் மெல்லிய முனை வெளியே தெரிய வந்தாலும் அதன் பின்புறம் தெரியும் வகையில் இருப்பது பொதுவாக விரும்பப்படுவதில்லை. ஆனால், சிறு முடிச்சில் இவ்வாறு இருப்பதும் இது விரும்பப்படாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

"கழுத்துப்பட்டி கட்டுவதற்கான 85 வழிகள்" என்னும் நூலின் காணப்படும் குறியீட்டு முறையின்படி இந்த முடிச்சை Lo Ri Co T என்னும் குறியீட்டினால் குறிப்பிடுவர்.

கட்டும் முறை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_முடிச்சு&oldid=2742680" இருந்து மீள்விக்கப்பட்டது