சிறிய சீழ்க்கைச்சிரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிறு சிறகி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறிய சீழ்க்கைச்சிரவி
தாய்லாந்தில் சிறிய சீழ்க்கைச்சிரவி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அன்செரிபார்மஸ்
குடும்பம்: Anatidae
துணைக்குடும்பம்: Dendrocygninae
பேரினம்: Dendrocygna
இனம்: D. javanica
இருசொற் பெயரீடு
Dendrocygna javanica
(ஓர்சுபீலுடு, 1821)

சிறிய சீழ்க்கைச் சிறகி அல்லது சிறிய சீழ்க்கைச்சிரவி (Lesser whistling duck, Dendrocygna javanica) என்பது வாத்து இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகின்றது. இதன் உடல் முழுவதும் பாக்கு நிறமானது. இதனால், இது வேறு தாராக்களுடன் இருந்தாலும் அடையாளங் காணலாம். இவற்றைத் தனித்தனியாகக் காண்பது மிகவும் அரிது. இவை எப்போதும் கூட்டம் கூட்டமாகவே திரியும்.[2] பத்து, பதினைந்து பறவைகள் சிறு சிறு கூட்டமாக நீர்ச் செடிகள் கொண்ட ஆழமற்ற நீர் நிலைகளிலும் நெல் வயல்களிலும் காணப்படும். நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களில் தங்குவதால் மரத்தாரா அல்லது மர வாத்து என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உணவு தவளை, நத்தை, மீன், புழுபூச்சிகள், தானியங்கள், இளந்தளிர்கள் போன்றவை ஆகும். இவை கூட்டமாகப் பறக்கும்போது விசிலடிப்பது போல ஒலி கேட்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Dendrocygna javanica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. ராதிகா ராமசாமி (1 திசம்பர் 2018). "குறையும் சீழ்க்கைச் சத்தம்..!". கட்டுரை. இந்து தமி்ழ். பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_சீழ்க்கைச்சிரவி&oldid=3884024" இலிருந்து மீள்விக்கப்பட்டது