சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
| சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் | |
|---|---|
| பெயர் | |
| பெயர்: | சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் |
| அமைவிடம் | |
| அமைவு: | சின்னம்பேடு திருவள்ளூர் மாவட்டம் தமிழ் நாடு இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | பாலசுப்பிரமணியர் (முருகன்) |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | தென்னிந்தியக் கோயில் |
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது.[1] சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர். அரசாங்க பதிவுகளில் கோயிலின் அசல் பெயர் சின்னம்பேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
தல வரலாறு
[தொகு]சிறுவாபுரி சிறீ பாலசுப்ரமணியம் கோவிலின் தல புராணத்தின்படி, இராமரின் மகன்களான லவா மற்றும் குசா இங்கு தங்கியிருந்துள்ளனர்.[2] 500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் சிவபெருமான் மற்றும் அவரது மனைவி பார்வதி தேவி, முருகன் அல்லது கார்த்திகேயரின் மகனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[3]
தெய்வங்கள்
[தொகு]இக்கோயிலின் முக்கிய தெய்வம் சிறீ பாலசுப்ரமணியர் ஆவார். திரு அண்ணாமலையார் மற்றும் திரு உண்ணாமலை அம்மன் ஆகியோரும் இக்கோயிலில் உள்ளனர். முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியான வள்ளி மணாளர் வள்ளியுடன் திருமண கோலத்தில் இங்கு உள்ளார்.[4]
அருணகிரிநாதரின் சிலை கோயில் கருவறையை நோக்கி உள்ளது. துறவியான இக்கவிஞர் இந்த கோயிலுக்கு பல முறை வருகை தந்து பல திருப்புகழ் பாடல்களைப் பாடினார். முருகப் பெருமானைப் புகழ்ந்து அர்ச்சனை திருப்புகழும் இங்கு பாடப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Balasubrahmanyar Temple : Balasubrahmanyar Temple Details | Balasubrahmanyar- Siruvapuri, Chinnampedu | Tamilnadu Temple | பாலசுப்பிரமணியர்".
- ↑ "Siruvapuri Murugan Temple | Festivals & Timings". devotionalyatra.com. 19 January 2022. https://devotionalyatra.com/siruvapuri-murugan-temple-timings/.
- ↑ "Bala Murugan Temple, Siruvapuri, Tamil Nadu" (in en). hinduism | spiritual blogs india | Expanded Consciousness| Awakening People| subconscious mind power | Mindfulness meditation |. 2 November 2020. https://atmanirvana.com/bala-murugan-temple-siruvapuri/.
- 1 2 "Siruvapuri Murugan Temple".