சிறுப்பிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறுப்பிட்டி, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.[1] யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் நீர்வேலிக்கும், புத்தூருக்கும் இடையில் அமைந்துள்ள இந்த ஊர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறத்தாழ 14 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூர், சிறுப்பிட்டி வடக்கு, சிறுப்பிட்டி தெற்கு, சிறுப்பிட்டி மேற்கு, சிறுப்பிட்டி கிழக்கு, சிறுப்பிட்டி மத்தி என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வூரைச் சுற்றி புத்தூர், அச்செழு, ஈவினை, நீர்வேலி ஆகிய ஊர்கள் உள்ளன.

நிறுவனங்கள்[தொகு]

சிறுப்பிட்டியில் சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, சிறுப்பிட்டி அரசாங்க தமிழ்க் கலவன் பாடசாலை என இரண்டு அரசாங்கப் பாடசாலைகள் உள்ளன.[2]

சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் கோயில், சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் ஆலயம், செல்லப்பிள்ளையார் கோயில், காத்தவராயன் கோயில் என்பன இவ்வூரில் உள்ள கோயில்களுட் சில.

புகழ்பெற்ற சிறுப்பிட்டியைச் சேர்ந்தோர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுப்பிட்டி&oldid=2854105" இருந்து மீள்விக்கப்பட்டது