சிறுசோறு
Jump to navigation
Jump to search
சிறுசோறு என்பது குடும்பத்தினர் மட்டும் உண்ணும் உணவு. அதியமான் தன் குடும்பத்தாருடன் சிறுசோறு உண்ணும்போதும், படைவீரர்களுடன் பெருஞ்சோறு உண்ணும்போதும் தன்னைச் சேர்த்துக்கொண்டு உண்பான் என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து விருந்து இல்லாமல் உணவு உண்பது சிறுசோறு (பெருமை இல்லாத உணவு) எனக் கருதினர் என்பதை உணரலாம். [1]
சிறுமியர் சிற்றில் இழைத்து விளையாடும்போது தூசு துரும்புகளை உணவு என வைத்து விளையாடுவர். இதனையும் சிறுசோறு எனக் குறிப்பிட்டனர். [2]
மேற்கோள்[தொகு]
- ↑ சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே!
பெரிய கள் பெறினே,
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! (புறநானூறு 235) - ↑ உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன்தாமரைத் தடங்கண் விழிகளின்,
அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறுங் கண்டு,நின்
முகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே. (நம்மாழ்வார், திருவாய்மொழி, - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 3470)