உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகுயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுகுயில்
யப்பானில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட சிறுகுயிலின் ஓசை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கு. போலியோசெபாலசு
இருசொற் பெயரீடு
குக்குலசு போலியோசெபாலசு
லாதம், 1790

சிறுகுயில் (Lesser cuckoo) என்பது குக்குலிடே குடும்பத்தில் உள்ள குக்குலசு பேரினத்தினைச் சார்ந்த குயில் சிற்றினமாகும் (குக்குலசு போலியோசெபாலசு).

சிறுகுயில் வங்காளதேசம், பூட்டான், சீனா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ஆங்காங், இந்தியா, யப்பான், கென்யா, வட கொரியா, தென் கொரியா, லாவோஸ், மலாவி, மியான்மர், நேபாளம், பாக்கித்தான், ரஷ்யா, சீசெல்சு, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, தன்சானியா, தாய்லாந்து, வியட்நாம், சாம்பியா,சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. செப்டம்பர் முதல் மார்ச் முடிய வடக்கே இமயமலையில் இருந்து தென்னிந்தியாவுக்கு வலசை வருகின்றன.[2]

விளக்கம்[தொகு]

மைனா அளவுள்ள இப்பறவை சுமார் 26 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கறுப்பாகவும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதன் உடலின் மேற்பகுதி சிலேட் சாம்பல் நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி கறுப்புப் பட்டைகளோடு கூடிய வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் மார்பும் வயிறும் சற்று மஞ்சள் தோய்த்ததுபோல இருக்கும். ஆண் பறவையும் பெண் பறவையும் ஒன்று போன்ற தோற்றம் கொண்டவை.[2]

பண்பாட்டில்[தொகு]

1971 ஜப்பானிய முத்திரையில் சிறுகுயில்

யப்பானில், சிறுகுயில் கோட்டோஜிசு (ホトトギス/杜鵑) என்று அழைக்கப்படுகிறது. இதனுடைய ஓசைக்காக இது பெரிதும் பாராட்டப்படுகிறது.

இது கோகின் வகாஷோ (920) என்ற தொகுப்பிலிருந்து பல வகா கவிஞர்களால் பாராட்டப்படுகிறது.[3] சேய் சோனாகான் (Sei Shōnagon) தனது கட்டுரையான தி பில்லோ புக் (1002)-ல் இந்தப் பறவையின் ஓசையினைக் கேட்பதற்காக இவரும் மற்ற அரசவை உறுப்பினர்களும் மேற்கொண்ட பயணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மேலும் இவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் கவிதை இயற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.[4] 100 கவிதைகளின் தொகுப்பான ஹயகுனின் இஷுவில் தொகுடைஜி சனேசாதாவின் 81 ஆம் கவிதையில் இது மையப் படம்.[5]

யப்பானிய ஐக்கூ இதழான கோட்டோஜிசு இதன் பெயரை இப்பறவையிலிருந்து பெற்றது.[6] இதழின் தலைசிறந்த மசோகா ஷிகியின் தத்தெடுக்கப்பட்ட புனை பெயரான, சிகி இதனைக் குறிக்கிறது.[7] சிகி என்பது சீன zǐguī (子規) உடன் ஒத்துள்ளது), இது இதன் நிலையான பெயரான dùjuān (杜鵑) க்கான மாற்றுப்பெயர்.[8]

சீன மொழியில் துஜூவான் என்பது பேரினப் பெயர் ஆகும். சிற்றினத்தின் பெயர் சியோதுஜூன் (小杜鵑).[8]

கொரிய இலக்கியத்தில், சிறுகுயிலின் ஓசை சோகத்தின் ஒலியைக் குறிக்கிறது. 

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Cuculus poliocephalus". IUCN Red List of Threatened Species 2016: e.T22683889A93005868. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683889A93005868.en. https://www.iucnredlist.org/species/22683889/93005868. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. 2.0 2.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 243–244.
  3. Keene, Donald (1999), Travelers of a Hundred Ages, Columbia University Press, p. 429, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231114370
  4. Sei Shōnagon (1991), "65 It Was during the Abstinence of the Fifth Month", The Pillow Book of Sei Shōnagon, translated by Ivan Morris, Columbia University Press, pp. 118–125, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231073370
  5. Porter, William N. (1979), "81 The Minister-of-the-Left of the Tokudai Temple", A Hundred Verses from Old Japan (The Hyakunin-isshu), Library of Alexandria, p. 81, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781465579430
  6. Higginson, William J. (1985). The Haiku Handbook: How to Write, Share, and Teach Haiku. Tokyo: Kodansha International (published 1989). p. 27. While editing Hototogisu ('cuckoo'), the magazine founded under Shiki's guidance, Takahama Kyoshi (1874-1959) had devoted...
  7. Sato, Hiroaki (2014), Japanese Women Poets: An Anthology: An Anthology, Routledge, p. 381, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317466963
  8. 8.0 8.1 "Zhongyao bieming sucha dacidian".. (1997). 学苑出版社. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9787507710236.  (in சீன மொழி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகுயில்&oldid=3780559" இலிருந்து மீள்விக்கப்பட்டது