உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகாப்பியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருங்காப்பியம் என்பது பாட்டுடைத் தலைவனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பாக இருக்கும். சிறுகாப்பியம் பாட்டுடைத் தலைவனின் ஒருசில வாழ்க்கைக் கூறுகளை மட்டுமே கூறும்.ஐம்பெருங்காப்பியங்கள். ஐஞ்சிறு காப்பியங்கள் என இவற்றைத் தொகுத்து வகைப்படுத்தியுள்ளனர்.

பெருங்காப்பியம், காப்பியம் என்னும் வகைப்பாட்டிலுள்ள காப்பியம் என்னும் சொல்லை நாம் 'சிறுகாப்பியம்' என எடுத்துக்கொண்டுள்ளோம். (தொல்காப்பியர் எழுத்து, சார்பெழுத்து எனப் பாகுபடுத்திக் காட்டுவதில் 'எழுத்து' எனபதைத் தெளிவுக்காக நாம் 'முதலெழுத்து' எனக் குறிப்பிடுவது போன்றது இது. [1])

அறம், பொருள், இன்பம், வீடு என்பவை நாற்பொருள். இந்த நாற்பொருளும் விரவி வர இயல்வது பெருங்காப்பியம். இந்த நான்கில் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ மட்டும் விரவி வரப் பாடப்பட்ட நூல் சிறுகாப்பியம்.[2]

சிறுகாப்பியம் ஒரே வகையான பாட்டாலும், பலவகையான பாட்டாலும் அமையும். அவற்றில் உரைநடையும் ஊடே வரும். வேற்றுமொழிச் சொற்களும் விரவும்.[3]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. தொல்காப்பியம் நூற்பா 1
  2. தண்டியலங்காரம் நூற்பா 10
  3. ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
    உரையும் பாடையும் விரவியும் வருமே - தண்டியலங்காரம் 11

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகாப்பியம்&oldid=1562482" இலிருந்து மீள்விக்கப்பட்டது