உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ ஹர்கோவிந்தப்பூர்

ஆள்கூறுகள்: 31°41′24″N 75°28′30″E / 31.69000°N 75.47500°E / 31.69000; 75.47500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ ஹர்கோவிந்தப்பூர்
சிறீ ஹர்கோவிந்தப்பூர் is located in பஞ்சாப்
சிறீ ஹர்கோவிந்தப்பூர்
சிறீ ஹர்கோவிந்தப்பூர்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைவிடம்
சிறீ ஹர்கோவிந்தப்பூர் is located in இந்தியா
சிறீ ஹர்கோவிந்தப்பூர்
சிறீ ஹர்கோவிந்தப்பூர்
சிறீ ஹர்கோவிந்தப்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°41′24″N 75°28′30″E / 31.69000°N 75.47500°E / 31.69000; 75.47500
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்குர்தாஸ்பூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,241
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
143515

சிறீ ஹர்கோவிந்தப்பூர் (Sri Hargobindpur), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டம், பட்டாலா வருவாய் வட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய சிறிய நகரம் ஆகும். இந்நகரம் பியாஸ் ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் சிறீ ஹர்கோபிந்த்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்படடது.

6வது சீக்கிய குருவான குரு அர்கோவிந்த் இந்நகரை நிறுவியதால்[1], அவரது பெயரால் இந்நகரத்தின் பெயர் சூட்டப்பட்டது.

முன்னர் சீக்கிய கூட்டமைப்பில் இருந்த ராம்கர்கியா இராச்சியத்தின் தலைநகராக இந்நகரம் விளங்கியது.[2]1630-ஆம் ஆண்டில் குரு ஹர்கோபிந்தின் தலைமையிலான சீக்கியப் படைகளுக்கும், முகலாயப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற ஹர்கோபிந்த்பூர் போர்க்களம் அமைந்த இடத்தில் தம்தமா சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது.[2]

பஞ்சாப் மாநிலத் தலைநகரான சண்டிகருக்கு வடமேற்கே 208 கிலோமீட்டர் தொலைவிலும்; மாநிலமாவட்டத் தலைமையிடமான குர்தாஸ்பூருக்கு தெற்கே 41.3 கிலோமீட்டர் தொலைவிலும் சிறீ ஹர்கோவிந்தப்பூர் நகரம் உள்ளது. சிறீ ஹர்கோவிந்தப்பூர் நகரத்திற்கு வடமேற்கே 29.9 கிலோமீட்டர் தொலைவில் பட்டாலா நகரம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13 வார்டுகளும், 1,587 குடும்பங்களும் கொண்ட சிறீ ஹர்கோவிந்தப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 8,241 ஆகும். அதில் 4,281 ஆண்கள் மற்றும் 3,960 பெண்கள் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.7% ஆக உள்ளது. பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் முறையே 2,707 மற்றும் 0% ஆக உள்ளனர். சீக்கியர்கள் 68.71%, இந்து சமயத்தினர் 29.12%, இசுலாமியர் 1.24%, கிறித்தவர்கள் 0.91% மற்றும் பிற சமயத்தினர் 0.02% வீதம் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mann, Gurinder Singh (May 3, 2001). "Table 1. Towns Associated with the Sikh Gurus". The Making of Sikh Scripture. Oxford University Press. p. 9. ISBN 9780198029878.
  2. 2.0 2.1 "Gurudwara Dhamdama Sahib". Government of Punjab.
  3. Sri Hargobindpur Population, Religion, Caste, Working Data Gurdaspur, Punjab - Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_ஹர்கோவிந்தப்பூர்&oldid=4444797" இலிருந்து மீள்விக்கப்பட்டது