உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ பாஷ்யம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமானுஜரின் சித்திரம்

ஸ்ரீ பாஷ்யம் (Sri Bhashya) (சமசுகிருதம்|श्रीभाष्य) என்பது வியாசர் எனப்படும் பாதநாராயணர் வழங்கிய பிரம்ம சூத்திரம் நூலுக்கு விசிட்டாத்துவைதம் அடிப்படையில் இராமானுசர் (1017–1137) இயற்றிய உரை நூலாகும்.[1]

விளக்கம்

[தொகு]

பிரம்ம சூத்திரத்திற்கான தனது ஸ்ரீ பாஷ்யம் விளக்கவுரையில் இராமானுஜர், உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் பிற ஸ்மிருதி நூல்கள், முந்தைய ஆச்சாரியர்கள் மற்றும் வேதாந்த-சூத்திரம் ஆகியவற்றின் மீதான தனது விளக்கத்தின் அடிப்படையில் விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைக்கிறார்.[2]

ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தத்தையும், குறிப்பாக அவரது மாயா வாதக் கோட்பாட்டையும் மறுக்கிறது இராமானுஜனின் ஸ்ரீ பாஷ்யம். இந்தப் படைப்பில், அவர் யதார்த்தத்தின் மூன்று வகைகளை (தத்துவங்கள்) விவரிக்கிறார்: கடவுள், ஆன்மா மற்றும் பருப்பொருள். இவை மத்வர் போன்ற பிற்கால வைணவ இறையியலாளர்களால் பயன்படுத்தியுள்ளனர். அவர் உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையிலான உறவை விளக்குகிறார்.[3]முக்திக்கு (மோட்சம்) ஒரு வழியாக பக்தி நெறியின் கோட்பாடுகளும் இதில் உருவாக்கப்பட்டது. ஸ்ரீ பாஷ்யத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு உதவும் வகையில் இராமானுஜர் வேதாந்த-தீபம் மற்றும் வேதாந்த-சாரம் ஆகிய நூல்களை எழுதினார்.[4][5][6]

அத்வைதம் மறுப்பு

[தொகு]

ஸ்ரீ பாஷ்யம் 1.1.1-ல், இராமானுஜர் தூய, வேறுபாடற்ற உணர்வு அல்லது பிரம்மம் மட்டுமே ஒரே யதார்த்தம், அதுவே இருப்புடன் சமமானது என்ற அத்வைத நிலைப்பாட்டைக் கூறி, பின்னர் அதை மறுக்கிறார். இந்த பார்வையில், உலகின் வெளிப்படையான பன்மைத்தன்மை அவித்யைக்கு (அறியாமை) காரணமாகக் கூறப்படுகிறது. இது பிரம்மத்தின் உண்மையான இயல்பை மறைத்து, வேறுபாட்டின் மாயையை உருவாக்கும் தொடக்கமற்ற மற்றும் விளக்க முடியாத ஒரு சக்தியாகும். பிரம்மத்தைத் தவிர மற்ற அனைத்தும், அறிவுச் செயல்கள் மற்றும் பொருள்கள் உட்பட, பொய்யானவை மற்றும் கருத்தியல் கட்டமைப்புகள் எனக் கருதப்படுகின்றன. சாதாரண அனுபவத்தை செல்லாததாக்குகிறது என்பதற்காக இராமானுஜர் இந்த பார்வையை விமர்சிக்கிறார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sri Ramanuja, M. Rangacharya (1899). Sri Bhashya English Translation by M Rangacharya, MB Varadaraja Aiyangar 3 Vols (in English). sanskritebooks.org/.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Isayeva, Natalia (1993-01-01). Shankara and Indian Philosophy (in ஆங்கிலம்). State University of New York Press. p. 243. ISBN 978-1-4384-0762-3.
  3. Vemsani, Lavanya (2016-06-13). Krishna in History, Thought, and Culture: An Encyclopedia of the Hindu Lord of Many Names: An Encyclopedia of the Hindu Lord of Many Names (in ஆங்கிலம்). ABC-CLIO. p. 293. ISBN 978-1-61069-211-3.
  4. Seshachalam, C. (1974). Visishtadvaita Philosophy and Religion: A Symposium by Twenty-four Erudite Scholars (in ஆங்கிலம்). Ramanuja Research Society. p. 82.
  5. Clayton, John (2006-11-25). Religions, Reasons and Gods: Essays in Cross-cultural Philosophy of Religion (in ஆங்கிலம்). Cambridge University Press. pp. iii. ISBN 978-1-139-45926-6.
  6. Chari, S. M. Srinivasa (1999). Advaita and Viśiṣṭādvaita: A Study Based on Vedānta Deśikā's Śatadūṣaṇī (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishers. p. 8. ISBN 978-81-208-1535-3.
  7. Bartley, C. J. (2013-10-11). The Theology of Ramanuja: Realism and Religion (in ஆங்கிலம்). Routledge. pp. 11–12. ISBN 978-1-136-85306-7.

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_பாஷ்யம்&oldid=4437374" இலிருந்து மீள்விக்கப்பட்டது