உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ பராசக்தி மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ பராசக்தி பெண்கள் கல்லூரி (Sri Parasakthi College for Women), என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற ஒரு தன்னாட்சி மகளிர் கல்லூரி ஆகும். இது 1964 ஆம் ஆண்டில் ஏ. ஆர். சுப்பையா முதலியார் (முன்னாள் ச.ம.உ மற்றும் கல்வி சீர்திருத்தவாதி) கல்லூரிக்கு 20 ஏக்கர் நிலத்தை திருவாங்கூரின் மன்னரான சித்திரைத் திருநாள் பலராமவர்மா நன்கொடையாக வழங்கினார். கல்லூரியின் முதல் துணைவேந்தர் எஸ். பகிரதி ஆவார்.

கல்லூரி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. 1978 ஆம் ஆண்டில் இந்த கல்லூரிக்கு சுயாட்சி வழங்கப்பட்டது. இது அனைத்து இந்தியாவிலும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரே மற்றும் முதல் கிராமப்புற மகளிர் கல்லூரி இது ஆகும்.

இந்தக் கல்லூரியானது கலை மற்றும் அறிவியல் துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை வழங்குகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]