சிறீ பகவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ பகவான் பகவான்
விஜயகுமார்
பிறப்பு7 மார்ச்சு 1949 (1949-03-07) (அகவை 75)
நத்தம் கிராமம், குடியாத்தம், தமிழ்நாடு, இந்தியா
இயற்பெயர்விஜயகுமார்
தேசியம்இந்தியர்
சமயம்இந்து சமயம்

ஸ்ரீ பகவான் அல்லது கல்கி பகவான் (Sri Bhagavan)[1] (பிறப்பு:7 மார்ச் 1949) இவருக்கு புஜ்ஜம்மா எனும் மனைவியும், வி. கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். இவரது பிறப்புப் பெயர் விஜயகுமார் ஆகும். [2][3]இவரது மனைவி புஜ்ஜம்மாவை பக்தர்கள் பத்மாவதி தாயாரின் அவதராமாக கருதி அம்மா பகவான் என்று அழைப்பர்.[4]

துவக்க கால வாழ்க்கை (1949–1983)[தொகு]

கல்கி பகவான் என்ற விஜயகுமார் 7 மார்ச் 1949-இல் வரதராஜுலு நாயுடு - வைதர்பி என்ற தம்பதியருக்கு குடியாத்தத்தில் பிறந்தவர்.[5] இவர் பள்ளிக் கல்வியை சென்னை, டான் பாஸ்கோ பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை சென்னை, வைஷ்ணவா கல்லூரியிலும் பயின்றார்.[6]விஜயகுமார் 9 சூன் 1977-இல் புஜ்ஜம்மா என்பவரை மணந்தார்.[7]

1971-இல் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக்கத்தின் முகவராக பணியாற்றியக் கொண்டிருந்த விஜயகுமாருக்கு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் ஈர்த்ததால், இவர் ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்யா பாளையத்தில் 1984 முதல் 1994 முடிய ஜீவ ஆஸ்ரமம் எனும் பெயரில் பள்ளிக்கூடத்தை நடத்தினார்.

ஆன்மிகப் பணி (1991–தற்போது வரை)[தொகு]

விஜயகுமார் - பத்மாவதி தம்பதியர் ஜீவ ஆஸ்ரமப் பள்ளியை ஆன்மீக வளர்ச்சிக்கான நிறுவனமாக மாற்றி, பொதுமக்களின் ஆன்மிக வளர்ச்சிக்காக 7 முதல் 21 நாட்கள் கொண்ட ஆன்மிகப் பயிற்சி பட்டறை வகுப்புகள் நடத்தினார். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட இவரது சீடர்கள், விஜயகுமாருக்கு கல்கி பகவான் பெயரிட்டு அழைத்தனர்.

1992-ல் சென்னை சோமங்கலத்தில் கல்கி பகவான் முதல் ஆன்மீகக் கிளையைத் துவக்கினார். 1995 முதல் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களில் தனது ஆன்மீகக் கிளைகளை விரிவாக்கினார்.

1999-இல் கல்கி பகவான் ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில், வரதய்யா பாளையம் என்னும் இடத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் நிறுவினார். இங்கு பலவகையான தியான வகுப்புகள் கட்டணத்துடன் நடத்தப்படுகின்றன. மேலும் வரதய்யா பாளையத்தில் ஒன்னெஸ் (Oneness) எனும் ஆன்மீகப் பல்கலைக்கழகத்தை கட்டி, அதில் கல்கி ஆசிரமத்தை நிறுவி, அதனை தனது ஆன்மீக நிறுவனத்தின் தலைமையகமாக மாற்றினார். இப்பல்கழக வளாகத்தில் 2004-இல் ஒன்னெஸ் கோயிலை கட்டினார்.[8][9][10][11][12][13]

வருமான வரி சோதனைகள்[தொகு]

அக்டோபர் 2019-இல் கல்கி பகவான், அம்மா பகவான் மற்றும் அவர்களின் மகன் கிருஷ்ணா ஆகியோர் தொடர்புடைய ஆசிரமங்கள், தியானக் கூடங்கள் மற்றும் அறக்கட்டளை நிறுவனங்களை இந்திய வருமான வரித் துறையினர் 6 நாட்கள் பரிசோதனை மேற்கொண்டதில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 8,00 கோடி மதிப்பிலான இந்திய மற்றும் அமெரிக்கப் பணத்தாள்கள், தங்க, வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.[14][15][16]

வருமான வரித்துறையினரின் சோதனையின் போது கல்கி பகவான், அம்மா பகவான் மற்றும் அவர்களது மகன் கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டனர் எனக்கூறப்பட்டதை அடுத்து, [17] தாம் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை எனக் கல்கி விஜயகுமார் அறிக்கை விட்டுள்ளார்.[18]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nadkarni, Vithal C. (2008). "Oneness to the rescue of a world in peril". The Economic Times. https://economictimes.indiatimes.com/oneness-to-the-rescue-of-a-world-in-peril/articleshow/2732690.cms. 
  2. "lifepositive". lifepositive.com. (Published by Religioscope)]
  3. "India: a visit to the Oneness Temple of Amma-Bhagwan". Religioscope. 13 July 2008.
  4. Sri Amma
  5. Taxmen raid ‘spiritual guru’ Kalki Bhagavan over charges of tax evasion, embezzlement
  6. "Narayanan, Dr. Vasudha, "A `White Paper' on Kalki Bhagavan, 29 September 2002", University of Florida, Gainesville, Montclair". msuweb.montclair.edu.
  7. இந்த கல்கி பகவான் ?
  8. கல்கி ஆசிரமத்தின் ஒன்னெஸ் டெம்பிள் பின்னணி
  9. Avadhani, Ramesh. "India: A visit to the Oneness Temple of Amma-Bhagawan". Religiscope.  Constructed by the Oneness organisation in the Indian state of Andhra Pradesh, a new temple boasts of the largest pillar-less meditation hall in Asia--able to accommodate 8000 people. What is this building, and what is the Oneness movement, about which there are few studies? Indian journalist Ramesh Avadhani has recently visited the place. In the following document, he reports about his experience. http://english.religion.info/2008/07/13/india-a-visit-to-the-oneness-temple-of-amma-bhagwan/
  10. Ardagh 2008, Chapter 2.
  11. Sunday, August 21, 2011, Anna Hazare Visited Oneness University
  12. Anna Hazare Comments on Youth Course of Oneness University
  13. Nadkarni, Vithal. "Oneness to the rescue of a world in peril". Economic Times.  http://economictimes.indiatimes.com/opinion/oneness-to-the-rescue-of-a-world-in-peril/articleshow/2732690.cms
  14. "கல்கி ஆசிரமத்தில் கணக்கில் காட்டாத வருமானம் ரூ.800 கோடி கண்டுபிடிப்பு". Archived from the original on 2019-10-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  15. கல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள், தங்க வைர நகைகள், ரொக்கப்பணம் குறித்து வருமான வரித்துறை அறிவிப்பு
  16. `முடிவுக்கு வந்த 6 நாள் வருமான வரித்துறை சோதனை'- கல்கி ஆசிரமத்தில் சிக்கியவை என்ன?
  17. "பகவானை"யே காணவில்லையாம். கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு!
  18. "நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்". Archived from the original on 2019-10-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_பகவான்&oldid=3631799" இலிருந்து மீள்விக்கப்பட்டது