உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ சிற்பி சித்தாந்தி சித்தலிங்க சுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ சிற்பி சித்தாந்தி சித்தலிங்க சுவாமி
சிறீ சிற்பி சித்தாந்தி சித்தலிங்க சுவாமி
சிறீ சிற்பி சித்தாந்தி சித்தலிங்க சுவாமி
பிறப்பு(1885-11-20)20 நவம்பர் 1885
கொள்ளேகால், மைசூர் மாநிலம்
இறப்பு11 சூலை 1952(1952-07-11) (அகவை 66)
மைசூர், மைசூர் மாநிலம்
தொழில்கட்டிடக் கலைஞர், துறவி, ஓவியர், சிற்பி மற்றும் எழுத்தாளர்

சிறீ சிற்பி சித்தாந்தி சித்தலிங்க சுவாமி (Sri Shilpi Siddanthi Siddalinga Swami) ( 20 நவம்பர் 1885 - 11 ஜூலை 1952) மைசூர் மாநிலத்தின் அரச குருவும், மைசூர் மகாராஜா ஜெயச்சாமராஜா உடையாரின் தனிப்பட்ட குருவும் ஆவார். இவர் ஒரு முக்கிய ஓவியராகவும், சிற்பியாகவும், கட்டடக் கலைஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். மைசூர் ஓவியம் மற்றும் கட்டடக்கலைக்கு இவர் செய்த பங்களிப்புக்காக அறியப்பட்டவர்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சிறீ சித்தலிங்க சுவாமி, சித்தப்பாஜி மற்றும் தாய் மல்லஜம்மா ஆகியோருக்கு 1885 ஆம் ஆண்டில் கொல்லேகால் அருகே ஒரு விஸ்வகர்மா குடும்பத்தில் பிறந்தவர்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

1908 ஆம் ஆண்டில், நான்காம் கிருட்டிணராச உடையாரின் கீழ் மைசூரில் பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

போசளப் பேரரசு மற்றும் ஆரம்பகால சாளுக்கியக் கலையை வலியுறுத்தும் இந்திய சிற்பக் கலையின் நூலான 'மானசர்' என்ற நூலை இயற்றினார். இவரது பிற பிரபலமான படைப்புகளில் குருகீதா மற்றும் சிவகீதா ஆகியவையும் சிற்பம் மற்றும் ஓவியம் பற்றிய இவரது சொந்த விளக்கங்களுடன் அடங்கும்.

பின்னர், மைசூரில் உள்ள காமகாமேசுவரி கோயிலுக்கு எதிரே ஜகத்குரு சைவசிற்ப பிரம்மரிசி குருகுலம் என்ற பெயரில் ஒரு சிற்பப் பள்ளியை நிறுவினார். இது 1949 ஆம் ஆண்டில், மைசூர் மகாராஜா ஜெயச்சாமராஜா உடையார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

புகைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shakapurusha Siddhalingaswamigalu by Shivalingappa L. Karnataka Shilpakala Academy.
  2. "Forgotten Architect". The Times of India. Retrieved 1 November 2015.