உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ சத்ரபதி சிவாஜி விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ சத்ரபதி சிவாஜி விளையாட்டரங்கம்
Shri Chhatrapati Shivaji Stadium
அரங்கத் தகவல்
அமைவிடம்கோலாப்பூர், மகாராட்டிரம்
உருவாக்கம்1952
இருக்கைகள்50,000
உரிமையாளர்கோலாப்பூர் துடுப்பாட்ட சங்க விளையாட்டரங்கம்
அணித் தகவல்
மகாராட்டிர துடுப்பாட்ட சங்கம்

சிறீ சத்ரபதி சிவாஜி விளையாட்டரங்கம் (Shri Chhatrapati Shivaji Stadium) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள கோலாப்பூரில் அமைந்துள்ள ஒரு பல்நோக்கு விளையாட்டரங்கமாகும். கோலாப்பூர் துடுப்பாட்ட சங்க விளையாட்டரங்கம் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.[1] இந்த விளையாட்ட்ரங்கம் மகாராட்டிர துடுப்பாட்ட அணிக்காக பல முதல் தர மற்றும் பட்டியல் ஏ போட்டிகளை நடத்தியுள்ளது. இங்கு சந்தோசு கோப்பை போட்டிகளும் நடந்துள்ளன. விளையாட்டரங்கம் கோலாப்பூர் துடுப்பாட்ட சங்கத்திற்கு சொந்தமானது. இச்சங்கமே விளையாட்டரங்கை நிர்வகிக்கிறது. பல ஆண்டுகளாக மகாராட்டிராவை ஆண்ட ஒரு சிறந்த மராட்டிய வீரரான சிவாஜியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இன்றுவரை இந்த மைதானம் 1952 முதல் 2006 வரை 14 முதல் தரப் போட்டிகளையும், அத்துடன் 1990-ஆம் ஆண்டில் ஒரு பட்டியல் ஏ போட்டியையும் நடத்தியுள்ளது. அந்தப் போட்டியில் மகாராட்டிரா துடுப்பாட்ட அணி வில்சு XI அணியிடம் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.[2]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sports Facilities in Maharashtra". Maharashtraonline. Archived from the original on 5 ஜூலை 2017. Retrieved 25 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Wills Trophy 1989/90 (Quarter-Final)