சிறீவிஜயா விமானம் 182

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீவிஜயா விமானம் 182
விபத்துக்குண்டான விமானம் சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு ஒளிப்படம்
விபத்து சுருக்கம்
நாள்9 சனவரி 2021 (9 சனவரி 2021)
சுருக்கம்நொறுங்கியது; விசாரணையின் கீழ்
(தேடுதல் நடக்கிறது)
இடம்லகி தீவிற்கு அருகே, ஆயிரம் தீவுகள், சாவகக் கடல்
5°57′50″S 106°34′28″E / 5.96389°S 106.57444°E / -5.96389; 106.57444ஆள்கூறுகள்: 5°57′50″S 106°34′28″E / 5.96389°S 106.57444°E / -5.96389; 106.57444
பயணிகள்50
ஊழியர்12 (பயணிகள் தவிர்த்த 6 பணியாளர்கள் உட்பட) [1][2][3]
வானூர்தி வகைபோயிங் 737-524
வானூர்தி பெயர்சிட்ரா
இயக்கம்சிறீவிஜயா ஏர்
வானூர்தி பதிவுபிகே-சிஎல்சி
பறப்பு புறப்பாடுசுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம், தஙராங், இந்தோனேசியா
சேருமிடம்சுபாடியோ பன்னாட்டு விமான நிலையம், போன்டியாநாக், மேற்கு கலிமந்தான், இந்தோனேசியா


சிறீவிஜயா விமானம் 182 ஜகார்த்தாவிலிருந்து இந்தோனேசியாவின் பொண்டியானாக் செல்லும் உள்நாட்டுப் பயணிகள் விமானமாகும் . ஜனவரி 9, 2021 அன்று, இந்தப் போயிங் 737–524 இந்தப் பாதையில் பறந்தது, புறப்பட்ட நான்கு நிமிடங்களுக்குப் பிறகு ராடாரில் இருந்து காணாமல் போனது. விமான நிலையத்திலிருந்து 19 கிலோ மீட்டர் (12 மைல்கள், 10 கடல் மைல்கள்) தொலைவிற்கு அப்பால் ஆயிரம் தீவுகளுக்கு அப்பால் உள்ள தண்ணீரில் மோதியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அப்பகுதியில் உள்ள உள்ளூர் மீனவர்களின் தகவல்களின் அடிப்படையில், விமானத்தைத் தேடும் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது. இடிபாடுகள், மனித எச்சங்கள் மற்றும் உடைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், முழு விமானத்தையும் அனைத்துப் பயணிகளையும் தேடும் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. விமானத்தின் கருப்புப் பெட்டி (குரல் மற்றும் விமானத் தரவுப் பதிவுக்கருவி) நிலை இந்தோனேசிய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வானூர்தி விபத்தின் காலவரிசை[தொகு]

முன்னதாக 181 விமானம், பங்கல் பினாங் டெபதி அமீர் விமான நிலையத்திலிருந்து மதியம் 12:11 மணிக்கு வந்தது. ஜகார்தா சுகர்னோ-ஹத்தா பன்னாட்டு வானுார்தி நிலையத்திலிருந்து உள்ள தாங்கெரங், பான்டென் 13:25 மணிக்கு, மேற்கு இந்தோனேசிய நேரம் (06:25 ஒ.ச.நே ), வந்தடையவும் திட்டமிடப்பட்டிருந்தது மேற்கு கலிமன்ஹாட்டன் போனடியானாக்கில் உள்ள சுபாடியோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு மேற்கு இந்தோனேசிய நேரம் 15:00 மணிக்கு, (08:00 ஒ.ச.நே) வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. விமான நிலையத்தின் முனையம் [4] டி யிலிருந்து பின்வாங்கிய பிறகு, [4] வானூர்தியானது ஓடுபாதை 25 ஆர் இலிருந்து உள்ளூர் நேரம் 14:36 மணிக்கு (07:36 ஒ.ச.நே) புறப்பட்டது. [5] மோசமான வானிலை மற்றும் பருவமழை ஆகியவற்றின் காரணமான தாமதத்தைத் தொடர்ந்து,விமானம் புறப்பட்டது. குறிப்பிடத்தக்க தாமதம் காரணமாக, இது 15:50 மேற்கு இந்தோனேசிய நேரம் (08:50 ஒ.ச.நே) அளவில் பொண்டியானாக்கில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வானூர்தியானது 13,000 அடி (4,000 மீ) உயரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது அது கரணம் அடித்து கீழ்நோக்கிப் பாய ஆரம்பித்தது. பின்னர் அது திடீரென வலதுபுறம் திரும்பியது.[6] ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் இதைக் கவனித்து, விமானத்தில் என்ன நடக்கிறது என்று விமானிகளிடம் கேட்டுள்ளார். ஆனால், வானூர்தியிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.[7] ஏர்நவ் ராடார்பெட்டி விமானத் தரவுகளின்படி, ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் 7.40 மணியளவில் வானூர்தியானது விண்ணை நோக்கி 10,900 அடி (3,300 மீ) முதல் 7,650 அடி (2,330 மீ) வரை விரைந்து கீழ்நோக்கி விழுந்ததாக அறிவித்தது.[8]வானூர்தி புறப்பட்ட நான்கு நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு நிமிடத்திற்குள் 10,000 அடி (3,000 மீ) கீழிறங்கியது என்று வானூர்தி ராடார் தெரிவித்துள்ளது.[9] ஒ.ச.நே 7.40 மணியளவில் விமானத்தின் கடைசியாக பதிவுசெய்யப்பட்ட உயரம் 250 அடி (76 மீ) என்று விமான கண்காணிப்பாளர் குறிப்பிட்டார்.[10] வழங்கப்பட்ட விமான தரவுகளின்படி, விமானம் ஒ.ச.நே 07:40:08 மற்றும் 07:40:14 க்கு இடையில் வெறும் ஆறு வினாடிகளில் 1,755 அடி (535 மீ) வீழ்ச்சியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து இரண்டு வினாடிகளில் 825 அடி (251 மீ), நான்கு வினாடிகளில் 2,725 அடி (831 மீ), மற்றும் கடைசி ஏழு வினாடிகளில் 5,150 அடி (1,570 மீ) வீழ்ச்சியடைந்தது.[11]

வானூர்தியானது வீழும் போது அதன் வேகமானது வினாடிகளில் குறைந்தும் அதிகரித்தும் அதிதீவிர மாறுதலுக்குட்பட்டது.[12] விமானப்போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருடனான கடைசி தொடர்பானது ஒ.ச.நே 07.40 மணியளவில் (மேற்கு இந்தோனேசிய நேரம் 14.40) லகீ தீவு மற்றும் லான்காங் தீவிற்கு இடையேயான ஒரு இடத்திலிருந்து கிடைத்ததாகும்.[13] வானூரதியானது ஜாவா கடலில் லகி தீவிற்கு அருகே சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 19 கிலோ மீட்டர் (12 மைல்கள்) தொலைவில் விழுந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டது.[14][15] வானூர்திப் போக்குவரத்துக் கட்டுபாட்டாளரின் கூற்றுப்படி துயரம் அல்லது ஆபத்து குறித்த அழைப்பேதும் பெறப்படவில்லை என்று தெரிகிறது. இந்தோனேசிய போக்குவரத்து அதிகாரிகளும் விமானமானது வானூர்தி கட்டுப்பாட்டாளரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியுள்ளனர் என்று கூறியுள்ளனர்.[16]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Kemenhub: Ada 50 Penumpang dan 12 Kru di Pesawat Sriwijaya Air yang Hilang Kontak". Kompas. 9 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 10 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Manifest Sriwijaya Air SJ-182: 50 Penumpang, 6 Kru Aktif dan 6 Ekstra Kru". Liputan6. 10 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 10 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Menhub: Sriwijaya Air SJ182 Angkut 50 Penumpang dan 12 Kru". Kompas. 9 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 10 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 "Antvklik". antvklik.com (இந்தோனேஷியன்). ANTV. 9 January 2021. 9 January 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 January 2021 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "ANTV" defined multiple times with different content
 5. "Pesawat Sriwijaya Air SJ182 Jakarta-Pontianak Hilang Kontak Berisi 56 Penumpang". merdeka.com (இந்தோனேஷியன்). 9 January 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Dua Kali Ledakan di Bawah Laut, Bupati: Pesawat Sriwijaya Air SJY 182 Jatuh" (இந்தோனேஷியன்). Suara. 9 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Ini Kronologi Jatuhnya Pesawat Sriwijaya Air PK-CLC". nasional.sindonews.com (இந்தோனேஷியன்). 2021-01-09. 9 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2021-01-09 அன்று பார்க்கப்பட்டது.
 8. "BREAKING Sriwijaya Air #SJ182 Boeing 737 disappeared from radars after takeoff". airlive.net. 9 January 2021. 9 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 9. "FlightRadar24: Pesawat Sriwijaya Air Hilang Kontak 4 Menit Setelah Lepas Landas" (in id-ID). Detik News. 9 January 2021. https://news.detik.com/berita/d-5327331/flightradar24-pesawat-sriwijaya-air-hilang-kontak-4-menit-setelah-lepas-landas. 
 10. "Sriwijaya Air flight 182 crashes near Jakarta". Flightradar24. 9 January 2021. 9 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Sriwijaya Air flight 182 – Normal Resolution CSV File". Flightradar24. 9 January 2021. 9 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Sriwijaya Air Flight 182 – Granular CSV File". Flightradar24. 2021-01-09. 9 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2021-01-10 அன்று பார்க்கப்பட்டது.
 13. Ridwan, Taufik; Fardah (9 January 2021). Sinaga, Yuni Arisandy (ed.). "Plane debris, cables found in waters off Laki Island, Pulau Seribu". Antara News. 2021-01-12 அன்று பார்க்கப்பட்டது.
 14. Ranter, Harro (9 January 2021). "ASN Aircraft accident Boeing 737–524 (WL) PK-CLC Jakarta-Soekarno-Hatta International Airport (CGK)". Flight Safety Foundation. Aviation Safety Network. 9 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Menhub Pastikan Sriwijaya Air SJY-182 Jatuh di Dekat Pulau Laki" (in id). Detik News. 9 January 2021. https://news.detik.com/berita/d-5327392/menhub-pastikan-sriwijaya-air-sjy-182-jatuh-di-dekat-pulau-laki. 
 16. "◤印尼空难◢印尼客机坠落路线曝光-漏夜搜救寻获" (in zh-hans). China Press. 2021-01-10. https://www.chinapress.com.my/20210110/%E2%97%A4%E5%8D%B0%E5%B0%BC%E7%A9%BA%E9%9A%BE%E2%97%A2%E5%8D%B0%E5%B0%BC%E5%AE%A2%E6%9C%BA%E5%9D%A0%E8%90%BD%E8%B7%AF%E7%BA%BF%E6%9B%9D%E5%85%89-%E6%BC%8F%E5%A4%9C%E6%90%9C%E6%95%91%E5%AF%BB%E8%8E%B7/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீவிஜயா_விமானம்_182&oldid=3094142" இருந்து மீள்விக்கப்பட்டது