சிறீராம் பரசுராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீராம் பரசுராம்
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை, இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடுதல்

சிறீராம் பரசுராம் (Sriram Parasuram) ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகராவார்.[1] இவர் வயலின் கலைஞராகவும் இருக்கிறார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் இசை பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு குடும்பத்தில் பிறந்தார். குழந்தை பருவத்திலிருந்தே இவர் இசையின் பக்கம் சாய்ந்தார். இவரது முதல் குரு இவரது தாயார் யம்பதி பார்வதி பரசுராம் ஆவார். தனது 4 வயதில் வயலின் கற்கத் தொடங்கினார். 7 வயதில் தனது முதல் வயலின் நிகழ்ச்சியை 90 நிமிடங்கள் தொடர்ந்து வழங்கினார். இவருக்கு மீனாட்சி என்ற சகோதரியும், விசுவநாத் பரசுராம், நாராயண் பரசுராம் என்ற இரண்டு சகோதரரும் உள்ளனர். அவர்களும் திறமையான இசைக்கலைஞர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒன்றிணைந்து "திரீ பிரதர்ஸ் அன்ட் வயலின்" என்ற இசைக்குழுவை நிறுவி சவரியா - ஒன்ஸ் அப்பான் எ டைம் தி ஓஹியோ பீஸ்ட்ஸ் சிங் என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டனர். ஜஜந்தரம் மமந்தரம் திரைப்படத்திற்காக இசையமைத்தனர்.[3]

கலாச்சார மற்றும் சமூக அம்சங்களின் ஆய்வுக்கான தனது முனைவர் பட்டத்தை வெஸ்லியன் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றார். ஒரு முதுநிலை மாணவராக இருந்தபோது தனது எதிர்கால மனைவி அனுராதாவை சந்தித்தார்.[4][5]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் திரைப்படப் பின்னணிப் பாடகியும், கருநாடக இசைக் கலைஞருமான அனுராதா ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[6] இவர்களுக்கு செயந்த், உலோகேசு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "Classical music in a changing world". The Hindu இம் மூலத்தில் இருந்து 6 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080306050303/http://www.hindu.com/2005/11/22/stories/2005112206150200.htm. பார்த்த நாள்: 21 February 2012. 
  2. "Not quite a Jugalbandi". The Hindu இம் மூலத்தில் இருந்து 12 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120912035859/http://www.thehindu.com/arts/music/article397722.ece. பார்த்த நாள்: 21 February 2012. 
  3. http://www.the-south-asian.com/Feb2001/Three%20Brothers.htm
  4. "Fusion is the forte of this music couple". The Hindu. 18 February 2007. Archived from the original on 20 பிப்ரவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 31 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  5. M. V. Ramakrishnan (15 September 2011). "Columns / M.V. Ramakrishnan : Musicscan – Contrasting colours". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 December 2011.
  6. "Colourful, creative tapestry". The Hindu. http://www.thehindu.com/arts/music/article2656271.ece. பார்த்த நாள்: 21 February 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீராம்_பரசுராம்&oldid=3929916" இலிருந்து மீள்விக்கப்பட்டது