சிறீமதுமிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறீமதுமிதா
Srimathumitha in a recording.jpg
சிறீமதுமிதா ஒரு இசைப்பதிவில்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சிறீமதுமிதா
பிறப்புமார்ச் 21
சென்னை, தமிழ்நாடு
இசை வடிவங்கள்கருநாடக இசை மற்றும் திரைப்படப் பிண்ணனி பாடகர்
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்2003 முதல் தற்போது வரை

சிறீமதுமிதா (Srimathumitha) இவர் பாரம்பரிய கருநாடக இசை மற்றும் திரைப்படப் பிண்ணனி பாடகராவார். பெரும்பான்மையாக இவர் தமிழ் மொழியில் அதிக பாடலகளைப் பாடுகிறார். இவர் தெலுங்கு, இந்தி, கன்னட பாடல்களிலும் பாடியுள்ளார். [1] இவரது சில வெற்றிப் பாடல்களில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் "அழகே அழகே", அழகிய தமிழ் மகன் திரைப்படத்தின் "வளையப்பட்டி தவிலே", 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் "கனா கானும் காலங்கள்" மற்றும் வேலாயுதம் திரைப்படத்தின் "ரத்தத்தின் ரததமே" போன்வை அடங்கும். இன்றைய திரைப்படப் பின்னணி பாடகர்களில் இவரும் ஒருவராவார். இவர் இளையராஜா, ஹாரிஸ் ஜயராஜ், யுவன் சங்கர் ராஜா, ஏ. ஆர். ரகுமான், பரத்வாஜ், தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், மற்றும் பரணி போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு பாடியுள்ளார் . ராஜ் தொலைக்காட்சி நடத்திய மெய்நிகர் தொடரான ராஜகீதத்தில் "2002 இன் சிறந்த குரல்" என்ற பெயரில் இவர் வெளிப்பட்டார். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவால் தேர்வு செய்யப்பட்ட 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விகடன் விருதுகளை வென்ற முதல் பின்னணி பாடகியும் இவராவார். ஏ. ஆர்.ரகுமானின் ஆஸ்கார் விருது பெற்ற சிலம்டாக் மில்லியனரின் ஒலிப்பதிவில் 2 பாடல்களில் இடம்பெற்றுள்ளார். [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்ப பின்னணி[தொகு]

சிறீமதுமிதா மார்ச் 21 அன்று சென்னையில் பிறந்தார். இவரது தந்தை வணிகக்கப்பற் படையிலிருந்து ஓய்வு பெற்ற தலைமை பொறியாளரான ஓ.எஸ். மணி என்பவரவார். இவரது தாயார் திருமதி. ஹேமலதா மணி ஒரு வீணை நிபுணராவார். இவரது சகோதரி சாருலதா மணி மற்றொரு பிரபல பின்னணி மற்றும் கர்நாடக பாடகியாவார். இந்து முதுநிலை மேல்நிலைப் பள்ளி மற்றும் சங்கரா வித்யாஷ்ரமம் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார். இவர் தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் மனித சிறப்பிற்கான யோகாவில் முதுகலை படித்து வருகிறார். இவர் வயலின் வாசிப்பார் மற்றும் பியானோவில் 3 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தனது நான்கு வயதிலிருந்தே பாட ஆரம்பித்தார். இவர் சென்னையில் மென்பொருள் பொறியாளரான திரு. அஸ்வின் விஸ்வநாதனை மணந்தார். இவரது திருமணத்தை தமிழ்த் திரைப்படத் தொழில்துறையின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர், இதில் மூத்த இயக்குனர் கே.பாலசந்தரும் அடங்குவார். [3]

கர்நாடக இசை[தொகு]

சிறீமதுமிதா இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாய் வீணை விதுஷி திருமதி. ஹேமலதா மணி வீணை மேதை சிட்டிபாபுவின் முதல் சீடராவார். மறைந்த லால்குடி ஜெயராமன் சீடரான பத்மஸ்ரீ திருமதி காயத்ரி சங்கரனின் கீழ் பாரம்பரிய கர்நாடக இசையில் தனது முறையான பயிற்சியைத் தொடங்கினார். முனைவர் சாவித்ரி சத்தியமூர்த்தியின் வழிகாட்டுதலின் பேரில் எஸ்.ராமநாதன் பாணியில் பல ஆண்டுகளாக மேம்பட்ட பயிற்சி எடுத்து வருகிறார்.

நிகழ்ச்சிகள்[தொகு]

சமீபத்தில் சென்னை தேனாபேட்டையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் லட்சுமண் சுருதி இசைக்குழு மற்றும் விஜய் தொலைக்காட்சி இணைந்து நடத்திய சென்னையில் திருவையாறு என்ற நிகழ்ச்சியில் இவர் தனது இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். [4]

இவர் பல ஆண்டுகளாக பாரம்பரிய கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறார். மேலும் 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் சென்னை, இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் நடந்த ஜன்மாஷ்டமி விழாவில் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார். அருபடை வீடு முருகன் மற்றும் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் மீது தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சிக்காக பல கருப்பொருள் இசை நிகழ்ச்சிகளையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீமதுமிதா&oldid=2939311" இருந்து மீள்விக்கப்பட்டது