சிறீமதி இராசசுந்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறீமதி இராசசுந்தரி (Shreemati Rasasundari) 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வங்காள எழுத்தாளராவார். 19 ஆம் நூற்றாண்டின் வங்காள தேசத்து இல்லத்தரசியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு அரிய நுண்ணறிவை வழங்கும் இவரது சுயசரிதைக்காக சிறீமதி நன்கு அறியப்படுகிறார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இராசசுந்தரி 1810 ஆம் ஆண்டு வங்காளதேச நாட்டின் பப்னா மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்தார். வங்காள மாகாணத்தையும் இந்தியாவை ஆட்சிசெய்த கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்தது . தானே கற்றல் முறையில் இராசசுந்தரி வீட்டில் சுய கல்வி கற்றார். ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டுமே சுயகல்வியைக் கற்ற இவருக்கு 1822 ஆம் ஆண்டு 12 வயது ஆகும்போது சீதநாத் சர்க்காருடன் திருமணம் நடந்தது. இவரது கணவர் பரித்பூர் மாவட்டம் ராம்தியாவின் நிலக்கிழார் ஆவார். மாமியார் மற்றும் மூன்று விதவை சகோதரி மருமகள் ஆகியோருடன் இராசசுந்தரியும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். மாமியார் குறிப்பாக இவருடன் அன்பாக இருந்தார்.[2]

தொழில்[தொகு]

இராசசுந்தரி ஒரு ஆழ்ந்த மதப்பற்றுள்ள பெண்ணாவார். குறைந்த கல்வியறிவு மட்டுமே கொண்டவராக இருந்தார். சமய நூலான சைதன்ய பாகவதத்தின் கையால் எழுதப்பட்ட நகலை இவரது கணவர் வாங்கி வந்தபோது அதை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இராசசுந்தரி பெற்றார். சைதன்ய பாகவதத்தில் இருந்து தன்னுடைய படிப்பை இவர் படிக்க முயன்றார். தன்னுடைய மட்டுப்படுத்தப்பட்ட அறிவைப் பயன்படுத்தி 25 வயதில் எப்படி படிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டார். தனது 50 வயதில் தனது மகன்களில் ஒருவரின் ஆதரவுடன் எழுதவும் கற்றுக்கொண்டார். இராசசுந்தரிக்கு 59 வயதாக இருந்தபோது இவரது கணவர் சீதநாத் சர்க்கார் இவரை விதவையாக்கிவிட்டு இறந்து போனார்.

இராசசுந்தரி தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன்னைக் கண்டுபிடித்து தன் சுயசரிதையை எழுத ஆரம்பித்தார். எளிய மற்றும் எளிமையான மொழியில் தனது சொந்த வாழ்க்கையை விவரித்தார். 1886 ஆம் ஆண்டு தான் எழுதி முடித்த சுயசரிதையை என் வாழ்க்கை என்ற பொருள் கொண்ட அமர் ஜிபோன் என்ற பெயரில் வெளியிட்டார். குடும்பத்திற்காக இவரைப்பற்றியும் இவரது பங்களிப்பைப் பற்றியும் மையப்படுத்துவதாக இச்சுயசரிதை அமைந்திருந்தது. தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பற்றி எங்கும் இதில் குறிப்பிடவில்லை. வங்காளிகள் சமுதாயத்தில் பெண்களின் பங்களிப்பும் அவர்கள் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுவதன் மூலம் அவர்களின் குடும்பங்களுக்கும் அவர்கள் செய்யும் கடமைகளுக்கும் எவ்வாறு கட்டுப்பட்டார்கள் என்பதையும் இச்சுயசரிதை சித்தரிக்கிறது. வீட்டிலுள்ள அனைவரும் சாப்பிட்டிருப்பதை உறுதிசெய்து கொண்ட பின்னர்தான் இவர்கள் சாப்பிட வேண்டும். பல பணிப்பெண்கள் இருந்தபோதிலும் கூட வீட்டு வேலைகளை காலை முதல் இரவு வரை இவரும் சேர்ந்து செய்வார்[2] என்பது போன்ற செய்திகள் இச்சுயசரிதையில் இடம்பெற்றன.

1898 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தனது சுயசரிதையின் இரண்டாவது பதிப்பில் அவர் மேலும் பல செய்திகளைச் சேர்த்தார். புத்தகம் இவரது வாழ்க்கையை வடிவமைக்கும் முயற்சியையும், வங்காளப் பெண்கள் எதிர்கொள்ளும் தீவிர சமூக அழுத்தங்களையும் சித்தரித்தது. இராசசுந்தரி சமுதாயத்தை நோக்கி கண்மூடித்தனமாக இருந்தாலும், மாறிவரும் உலகிற்கேற்ப பெண்களின் பிம்பத்தை மாறுவதின் அவசியம் உட்பட இவரது சுயசரிதை பேசுகிறது. இவரது சுயசரிதை முழுவதும் தெய்வத்தின் மீதான ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.[3]

இறப்பு[தொகு]

சிறீமதி இராசசுந்தரி 1899 ஆம் ஆண்டு இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sen, Nivedita (2015) (in en). Family, School and Nation: The Child and Literary Constructions in 20th-Century Bengal. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781317410614. https://books.google.com/books?id=hf4WCgAAQBAJ&q=Amar+Jibon+%28my+Life&pg=PT160. பார்த்த நாள்: 13 November 2017. 
  2. 2.0 2.1 Murshid, Ghulam. "Rasasundari, Shreemati". Banglapedia (ஆங்கிலம்). 13 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. Tripathi, Salil (2016). The Colonel Who Would Not Repent: The Bangladesh War and Its Unquiet Legacy. Yale University Press. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-300-21818-3. https://books.google.com/books?id=bcffCwAAQBAJ&pg=PA7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீமதி_இராசசுந்தரி&oldid=3272499" இருந்து மீள்விக்கப்பட்டது