உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீபதி ஆர்கேடு

ஆள்கூறுகள்: 18°57′46″N 72°48′45″E / 18.9628316°N 72.8124194°E / 18.9628316; 72.8124194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீபதி ஆர்கேடின் ஏ தொகுதி
Shreepati Arcade "A" Wing
சிறீபதி ஆர்கேடின் பக்கவாட்டுத் தோற்றம்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு[1]
வகைகுடியிருப்பு வானளாவி
இடம்மும்பை
ஆள்கூற்று18°57′46″N 72°48′45″E / 18.9628316°N 72.8124194°E / 18.9628316; 72.8124194
திறப்பு2002[2]
உயரம்
கூரை154 m (505 அடி)[3]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை45[2]
உயர்த்திகள்6
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)ஏ.ஆர். ரேசா காபூல்

சிறீபதி ஆர்கேடு (Shreepati Arcade) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள மும்பை நகரத்தில் 2002ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு குடியிருப்பு வானளாவிய கட்டடமாகும். மும்பையில் உள்ள நானா சௌக்கில், மும்பை நகரின் மையப்பகுதியில் உள்ள கிராண்ட்டு சாலைப் பாலத்திற்கு சற்று தொலைவில் இக்கட்டடம் அமைந்துள்ளது.

சிறீபதி ஆர்கேடு கட்டடம் 154 மீட்டர் (500 அடி) உயரம் கொண்டுள்ளது.[4] இங்கு 45 தளங்கள் உள்ளன. ஆறு சுவிசு சிண்ட்லர்சு குழுமத்தின் மின்தூக்கிகள், வினாடிக்கு 4 மீட்டர் வரை வேகத்தில் இயங்கும் அதிவேக மின்தூக்கிகள் இங்கு பொறுத்தப்பட்டுள்ளன. இவை தரையிலிருந்து 45ஆவது மாடிக்குச் செல்ல 35 வினாடிகள் மட்டுமே ஆகும். கட்டடத்திற்குள் உள்ள தீயணைப்பு பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்குகின்றன. இவை தெளிப்பான் அமைப்பைக் கொண்டுள்ளன. பிரதான மற்றும் சமையலறை கதவுகள் இரண்டு மணிநேர தீ மதிப்பீடு கொண்டவையாகும். கட்டடத்தில் மின்கம்பித் தொகுதி அமைப்பில் காப்பிடப்பட்ட கம்பிகள் வழியாக மின்னோட்டம் செல்கிறது. இந்த வானளாவிய கட்டிடம் பூகம்பத்தை எதிர்க்கும் திறன் கொண்டது.

சிறீபதி ஆர்கேடின் கூட்டுப் பொழுதுபோக்கு மனையில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், நீராவிக் குளியல் அறை ஆகியவை உள்ளன. இந்த கட்டடத்தில் வசிப்பவர்கள் அனைவரும் சைவ உணவு உண்பவர்களாக இருக்க வேண்டும் என்ற குடியிருப்பு கட்டுப்பாடு உள்ளது. இந்த வகையான நடைமுறை இந்தியாவில் அசாதாரணமாகக் கருதப்படவில்லை.[2][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shreepati Arcade". Emporis. Archived from the original on 10 April 2015.
  2. 2.0 2.1 2.2 "Shreepati Arcade". Skyscraperpage.com. Retrieved 2023-06-01.
  3. Shreepati Arcade at CTBUH Skyscraper Database
  4. Emporis[usurped!]
  5. Times of India

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீபதி_ஆர்கேடு&oldid=4296440" இலிருந்து மீள்விக்கப்பட்டது