சிறீநிவாச மல்லர்
| சிறீநிவாச மல்லர் | |
|---|---|
சிறீநிவாச மல்லர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ஓவியம் | |
| இலலித்பூரின் அரசன் | |
| ஆட்சிக்காலம் | 1661–1685 |
| முன்னையவர் | சித்தி நரசிம்ம மல்லர் |
| பின்னையவர் | யோக நரேந்திர மல்லர் |
| பிறப்பு | சுமார் 1627 நேபாளம் |
| இறப்பு | 1687 |
| துணைவர் | மிர்காவதி |
| குழந்தைகளின் பெயர்கள் |
|
| அரசமரபு | மல்லர் வம்சம் |
| தந்தை | சித்தி நரசிம்ம மல்லர் |
| தாய் | பானுமதி |
சிறீநிவாச மல்லர் (Srinivasa Malla) மல்லர் வம்சத்தைச் சேர்ந்தவரும் இலலித்பூரின் மன்னரும் ஆவார். சித்தி நரசிம்ம மல்லரின் மகனான இவர் 1661 முதல் 1685 இல் பதவி விலகும் வரை இலலித்பூரை ஆட்சி செய்தார்.[1][2]
இளமை வாழ்க்கை
[தொகு]சிறீநிவாச மல்லர் தனது தந்தை சித்தி நரசிம்ம மல்லரால் சிறு வயதிலிருந்தே நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். 1641 வரை. தனது தந்தையுடன் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும் 1649 ஆம் ஆண்டில் இவர் தனது தந்தையுடன் இணைந்து ஒரு கூட்டு ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார்.[2]
ஆட்சி
[தொகு]சிறீநிவாசனின் தந்தை சித்தி நரசிம்மன் 1657இல் மதயாத்திரை மேற்கொள்வதற்காக பதவி விலகிய பின்னர் இவர் மன்னராக அங்கீகரிக்கப்பட்டார். இவர் 1661இல் முறைப்படி இலலித்பூரின் மன்னராக முடிசூட்டப்பட்டார். இவரது ஆட்சியின் போது, இலலித்பூர் மேற்கில் கோர்கா மற்றும் தனஹுன் இராச்சியங்களுடனும், வடமேற்கில் கஜுரிபேடா இராச்சியத்துடனும் ஒரு எல்லையைக் கொண்டிருந்தது.[1]
அண்டை அரசுகளுடன் போர்கள்
[தொகு]1658 ஆம் ஆண்டில், காந்திபூரைச் சேர்ந்த பிரதாப் மல்லனுடன் இவருக்கு தகராறு ஏற்பட்டது. மேலும் பக்தபூரின் ஜகத் பிரகாஷ் மல்லனுடன் இணைந்து காந்திபூரைத் தாக்கினார். தடைசெய்யப்பட்ட வர்த்தக வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால் இது பக்தபூருக்கு பயனளித்தது. அதே ஆண்டில், காந்திபூரும் இலலித்பூரும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நட்புறவை ஏற்படுத்திக் கொண்டன.[3]
1660 ஆம் ஆண்டில், காந்திபூர் அதிகார வரம்பிற்குள் வந்த சாங்கு அருகே ஒரு சிறிய இராணுவ புறக்காவல் நிலையத்திற்கு பக்தபூரின் ஜகத் பிரகாஷ் மல்லர் தீ வைத்தார். ஜகத் பிரகாஷ் எட்டு பேரின் தலையை துண்டித்தும், சிலரை கைதிகளாக அழைத்துச் சென்றார். இதற்கு பதிலடியாக, இலலித்பூரும் காந்திபூரும் இணைந்து பக்தபூர் மீது தாக்குதல்களை நடத்தி அதை கைப்பற்றினர். 1662 ஆம் ஆண்டில், சிறீநிவாச மல்லர் காந்திபூருக்கும் பக்தபூருக்கும் இடையிலான சண்டையை மத்தியஸ்தம் செய்து அமைதி ஏற்படுத்தினார்.[1][3][4]
வாரிசு
[தொகு]சிறீநிவாச மல்லர் தனது மகன் யோக நரேந்திர மல்லனுக்கு அவரது சிறு வயதிலிருந்தே இராச்சியத்தின் நிர்வாகப் பணிகளில் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். சிறீநிவாச மல்லரின் தாயார் 1679இல் இறந்தார். அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவரின் மனைவி ஒருவரும் இறந்தார். இது தவிர, யோக நரேந்திரனின் நடவடிக்கைகளால் பொது மக்களிடையே ஒரு பொது அதிருப்தி உருவானது. இவை அனைத்தும் இவருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி, 1685 ஆம் ஆண்டில் தனது மகனுக்காக சிம்மாசனத்தை துறக்க வழிவகுத்தது.[1]
சொந்த வாழ்க்கை
[தொகு]சிறீநிவாச மல்லனும் தனது தந்தையைப் போலவே மிகுந்த மத பக்தியுடைய மன்னராக இருந்தார். இவர் ஒரு இந்துவாக இருந்தார், ஆனால் பௌத்த மதத்திற்கும் தாராள மனப்பான்மையுடன் இருந்தார். இவரும் பல கோயில்களைக் கட்டினார், பலவற்றைப் புதுப்பித்தார், மத இடங்களுக்கு தாராளமாக நில மானியங்களை வழங்கினார். இலக்கியத்திலும் ஆர்வம் கொண்ட இவர் நாடகங்களையும் எழுதினார். 1687 இல் இறக்கும் வரை இவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal (PDF) (in English). Kathmandu, Nepal: University of Cambridge. pp. 72–74. Archived from the original (PDF) on 2024-12-03. Retrieved 2025-03-05.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - 1 2 Shrestha, D.B.; Singh, C.B. (1972). The History of Ancient and Medieval Nepal (PDF) (in English) (1st ed.). Kathmandu: கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம். pp. 57–58. Archived from the original (PDF) on 2025-05-09. Retrieved 2025-03-05.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - 1 2 Regmi, Mahesh C.. "Regmi Research Series". German Oriental Society 5: 198–200. https://studylib.net/doc/8525992/regmi_05.
- ↑ Wright, Daniel (1877). History of Nepal (PDF). கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம். pp. 243–247.