சிறீகாந்த் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீகாந்த் வர்மா
பிறப்பு(1931-09-18)18 செப்டம்பர் 1931
பிலாசுப்பூர் (சத்தீசுகர்)
இறப்பு25 மே 1986(1986-05-25) (அகவை 54)
நியூயார்க் நகரம்
தேசியம்இந்தியர்
பணிகவிஞர்
அரசியல்வாதி
வாழ்க்கைத்
துணை
வீணா வர்மா
பிள்ளைகள்அபிசேக் வர்மா

சிறீகாந்த் வர்மா (Shrikant Verma)(18 செப்டம்பர் 1931 - 25 மே 1986) என்பவர் இந்தியக் கவிஞர் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து 1976 முதல் 1982 வரையும், 1982 முதல் 1986 வரையும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். வர்மா புற்றுநோயால் 1986ஆம் ஆண்டு நியூயார்க்கில் இறந்தார்.[1]

குடும்பம்[தொகு]

வர்மா, மத்தியப் பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீணா வர்மாவை மணந்தார்.[2][3][4][5] இந்த இணையரின் மகன் அபிஷேக் வர்மா ஆவார். இவர் ஓர் இந்திய ஆயுத வியாபாரி மற்றும் 1997-ல் இந்தியாவின் இளைய கோடீசுவரராக அறிவிக்கப்பட்டாவர் ஆவார்.[6]

கல்வி[தொகு]

வர்மா இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் நகரில் பிறந்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இருபது நூல்களை எழுதியுள்ளார்.[7]

விருது[தொகு]

வர்மா 1976ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச அரசிடமிருந்து ஜல்சாகர் படத்திற்காகத் துளசி சம்மான் மற்றும் 1981ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநில கலா பரிசத்தில் இருந்து ஷிக்ஷா சம்மான் விருதுகளைப் பெற்றார். 1982ல், புது தில்லியில் நடைபெற்ற ஆப்ரோ-ஆசிய எழுத்தாளர் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.[8] 1987-ல், இவருக்கு மரணத்திற்குப் பின் மகத் திரைப்படத்திற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

இறப்பு[தொகு]

வர்மா புற்றுநோயால் 1986ஆம் ஆண்டு நியூயார்க்கில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Great Performance: The awkward alliance of poetry and politics" (in en-US). The Indian Express. 2014-03-08. http://indianexpress.com/article/india/india-others/the-great-performance/. 
  2. "Member of Rajya Sabha from 1952-2003" (PDF). பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
  3. "Photo Gallery". www.priyadarshniacademy.com. Archived from the original on 2016-09-16. பார்க்கப்பட்ட நாள் 2016-09-04.
  4. "Verma, wife in CBI net for tweaking defence deals". பார்க்கப்பட்ட நாள் 2016-09-04.
  5. "Team Anna alleges corruption in defence deals, names MP's son - Firstpost" (in அமெரிக்க ஆங்கிலம்). 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2016-09-04.
  6. "Rich across the world identify with the same brands for status". பார்க்கப்பட்ட நாள் 2016-09-04.
  7. "Indian Poets I Bio-Notes on Hindi Poets I". www.lchr.org. Archived from the original on 24 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
  8. Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot. https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&q=Madhya+Pradesh+Government%27s+Tulsi+Puraskar+SHrikant+verma&pg=PA4504. பார்த்த நாள்: 25 May 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீகாந்த்_வர்மா&oldid=3620170" இலிருந்து மீள்விக்கப்பட்டது