ஸ்ரீகாந்த் (நடிகர்)
ஸ்ரீகாந்த் | |
|---|---|
| பிறப்பு | ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி பெப்ரவரி 28, 1979 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | திரைப்பட நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002 – இன்றுவரை |
| வாழ்க்கைத் துணை | வந்தனா ஸ்ரீகாந்த் |
ஸ்ரீகாந்த் (ஆங்கிலம்: Srikanth, பிறப்பு: பெப்ரவரி 28, 1979) தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் தென்னிந்திய நடிகர் ஆவார். இவரது அறிமுகம் 2002-ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அமைந்தது. இவரது திரைப்படங்கள் தமிழில் பார்த்திபன் கனவு, தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெரும் வெற்றிப்படங்களாக விளங்கின.[1] தெலுங்குத் திரைப்படங்களில் இவர் ஸ்ரீராம் என்று அறியப்படுகிறார்.
திரைவாழ்வு
[தொகு]ஸ்ரீகாந்த்தின் திரை நுழைவு ரோஜாக்கூட்டம் என்ற சசியின் காதல் படத்தில் பூமிகா சாவ்லாவுடன் நடித்தார். முதற் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்து பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.[2] இவரது அடுத்த வெற்றிப்படமாக சினேகாவுடன் நடித்த ஏப்ரல் மாதத்தில் அமைந்தது. தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவான பார்த்திபன் கனவு இவருக்கு தமிழ்நாடு மாநிலத் திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது.[3] பின்தொடர்ந்த படங்கள் தோல்வியைத் தழுவ சிலகாலம் வாய்ப்புகள் இன்றி இருந்தார். 2007-ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் நடித்த ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குநர் சங்கரின் நண்பன் உட்பட பல புதிய படங்களில் நடித்தார்.[4]
திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2002 | ரோஜாக்கூட்டம் | இளங்கோ | தமிழ் | சிறந்த புது நடிகருக்கான விருது |
| 2002 | ஏப்ரல் மாதத்தில் | கதிர் | தமிழ் | |
| 2003 | மனசெல்லாம் | பாலா | தமிழ் | |
| 2003 | பார்த்திபன் கனவு | பார்த்திபன் | தமிழ் | தமிழ்நாடு திரைப்பட விருது |
| 2003 | ஜூட் | ஈஸ்வரன் | தமிழ் | |
| 2003 | Okariki Okaru | காமேஸ்வர ராவ் | தெலுங்கு | தமிழில் உன்னை பார்த்த நாள் முதல் |
| 2004 | போஸ் | போஸ் | தமிழ் | |
| 2004 | வர்ணஜாலம் | சக்திவேல | தமிழ் | |
| 2005 | கனா கண்டேன் | பாஸ்கர் | தமிழ் | |
| 2005 | ஒரு நாள் ஒரு கனவு | சீனு | தமிழ் | |
| 2005 | பம்பரக்கண்ணாலே | முருகா | தமிழ் | |
| 2006 | மெர்க்குரி பூக்கள் | கார்த்திக் | தமிழ் | |
| 2006 | உயிர் | சுந்தர் | தமிழ் | |
| 2006 | கிழக்கு கடற்கரை சாலை | சந்தோஸ் | தமிழ் | |
| 2007 | Adavari Matalaku Ardhalu Verule | வாசு | தெலுங்கு | |
| 2008 | வல்லமை தாராயோ | சேகர் | தமிழ் | கௌரவத் தோற்றம் |
| 2008 | பூ | தங்கராசு | தமிழ் | |
| 2009 | இந்திரா விழா | சந்தோஸ் சீனிவாசன் | தமிழ் | |
| 2010 | ரசிக்கும் சீமானே | நந்து | தமிழ் | |
| 2010 | போலிஸ் போலிஸ் | தெலுங்கு | தமிழில் குற்றப்பிரிவு | |
| 2010 | துரோகி | சாமி சீனிவாசன் | தமிழ் | |
| 2010 | மந்திரப் புன்னகை | தமிழ் | கௌரவத் தோற்றம் | |
| 2011 | உப்புக்கண்டம் பிரதர்ஸ் பேக் இன் ஆக்சன் | பாபி | மலையாளம் | தமிழில் சத்ரிய வம்சம் |
| 2011 | தாதா | ராஜீவ் | தெலுங்கு | |
| 2011 | சதுரங்கம் | திருப்பதிசாமி | தமிழ் | |
| 2012 | நண்பன் | வெங்கட் இராமகிருஷ்ணன் | தமிழ் | |
| 2012 | நி்ப்பு | சிறீராம் | தெலுங்கு | தமிழில் ரவடி ராஜா |
| 2012 | ஹீரோ | பிரேமானந்த் | மலையாளம் | |
| 2012 | பாகன் (திரைப்படம்) | சுப்பரமணியம் | தமிழ் | |
| 2013 | புட்டி | மலையாளம் | ||
| 2014 | எதிரி எண் 3 | தமிழ் | தயாரிப்பு நிலையில் | |
| 2014 | ஓம் சாந்தி ஓம் | தமிழ் | படபிடிப்பில் | |
| 2014 | நம்பியார் | ராமச்சந்திரன் | தமிழ் | படபிடிப்பில் |
| 2015 | சௌகார்பேட்டை | தமிழ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-10. Retrieved 2011-09-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-06-27. Retrieved 2011-09-26.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ http://www.thehindu.com/arts/cinema/article2115546.ece
- ↑ http://www.thehindu.com/arts/cinema/article108928.ece