உள்ளடக்கத்துக்குச் செல்

சிறிய தாமிரச் சுமப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறிய தாமிரச் சுமப்பி அல்லது சிறிய செப்புச் சுமப்பி (Small copper carrier) என்பது சிறுநீரில் தாமிரத்தைச் சுமந்து செல்லும் சிறிய மூலக்கூறு ஆகும். இது ஆங்கிலத்தில் SCC என்று சுருக்கக் குறியீட்டால் அழைக்கப்படுகிறது. உடலில் தாமிரத்தின் அளவு அதிகரிக்கும்போது கல்லீரலால் பித்தப்பைக்கு வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டால் மனித அல்லது சுண்டெலி சிறுநீரகத்திற்குள் வெளியேற்றப்படுகிறது. வில்சன் நோயில் இத்தகைய குறைபாடு உண்டாகிறது[1]. சிறுநீரில் தாமிரம் வெளிப்படுவதைக் கொண்டு இந்நோயின் இயல்பு அறியப்படுகிறது. லாரன்சு வில்சன் கிரே மற்றும் சுவெட்லனாலட்செங்கொ ஆகியோர் இந்நோயைக் கண்டறிந்தனர்[2]. இச்சிறிய தாமிரச் சுமப்பி 2 கேடா (2 kDa) எனப்படுகிறது. இதன் சரியான இயல்பு இன்றுவரை அறியப்படவில்லை என்றாலும் அது ஒரு பெப்டைடாக இருக்கலாம் என்று முன்கணித்துக் கூறப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Copper's previously unknown exit strategy". 13 July 2012. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.
  2. Gray, Wilson Lawrence. "Mechanisms of Homeostatic Control of Copper in Tissues". Database for Research Grants. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Cobine, Paul; Lawrence W. Gray; Fangyu Peng; Shannon A. Molloy; Venkata S. Pendyala; Abigael Muchenditsi; Otto Muzik; Jaekwon Lee et al. (2012). "Urinary Copper Elevation in a Mouse Model of Wilson's Disease Is a Regulated Process to Specifically Decrease the Hepatic Copper Load". PLoS ONE 7 (6): e38327. doi:10.1371/journal.pone.0038327. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. Bibcode: 2012PLoSO...738327G. http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0038327. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_தாமிரச்_சுமப்பி&oldid=3357114" இலிருந்து மீள்விக்கப்பட்டது