உள்ளடக்கத்துக்குச் செல்

சிறிய கருப்பு கட்டுவிரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறிய கருப்பு கட்டுவிரியன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பங்காரசு
இனம்:
ப. லிவிடசு
இருசொற் பெயரீடு
பங்காரசு லிவிடசு
வால், 19071907

சிறிய கருப்பு கட்டுவிரியன் (பங்காரசு லிவிடசு-Bungarus lividus) என்பது இந்தியா, வங்காளதேசம் மற்றும் நேபாளத்தில் காணப்படும் நச்சுப் பாம்பு குடும்பமான எலாபிடே சிற்றினமாகும்.[2] பாம்பின் நிறத்தைக் குறிக்கும் வகையில், "நீல உலோக நிறம்" அல்லது "ஈய நிறம்" என்று பொருள்படும் இலத்தீன் சொல்லான லிவிடசு இதன் சிற்றினப் பெயராகும்.

விளக்கம்

[தொகு]

சிறிய கருப்பு கட்டுவிரியன் சிறிய அளவிலான பாம்பு ஆகும். இதன் உடல் மென்மையாகவும் கருப்பு அல்லது நீலம்-கருப்பு நிறத்திலும் இருக்கும். மேல் உதடு வெள்ளை நிறத்திலிருக்கும். இதன் உட்புறங்கள் சாம்பல் நிற விளிம்புகளுடன் வெள்ளை நிறத்தில் உள்ளன. கண்கள் சிறியவை, வட்டமான கருவிழியுடன் கருப்பு நிறத்தில் உள்ளன. கண்கள் மூக்கை நோக்கி அமைந்துள்ளன. செதில்கள் முதுகுப்புறத்தில் 15 வரிசைகளில் (15:15:15) அமைக்கப்பட்டுள்ளன. நடு-முதுகுப்புறச் செதில்கள் மற்ற வரிசைகளை விடச் சற்று பெரியவை. குத மற்றும் வாலடிச் செதில்கள் பிரிக்கப்படாதவை.[3]

பரவல்

[தொகு]

சிறிய கருப்பு கட்டுவிரியன் இந்தியா (வட வங்காளம், வடகிழக்கு இந்தியா) வங்காளதேசம், நேபாளத்தில் காணப்படுகிறது.[4]

வட்டாரம் இனம்: அசாம், இந்தியா

சூழலியல்

[தொகு]

உணவு

[தொகு]

சிறிய கருப்பு கட்டுவிரியன் முதன்மையாக ஓபியோபேகசு எனப்படும் பாம்புண்ணி வகையினைச் சார்ந்தது ஆகும். அதாவது இது மற்ற பாம்புகளை வேட்டையாடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Limbu, K.P.; Ghosh, A.; Das, A.; Giri, V. (2022). "Bungarus lividus". IUCN Red List of Threatened Species 2022: e.T127914543A219117279. doi:10.2305/IUCN.UK.2022-2.RLTS.T127914543A219117279.en. https://www.iucnredlist.org/species/127914543/219117279. பார்த்த நாள்: 15 August 2023. 
  2. "Lesser Black Krait ( Bungarus lividus Cantor, 1839 )". indiansnakes.org. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
  3. Das, Abhijit 2018.
  4. "Small, secretive & highly venomous snake seen for first time in Nepal’s hills". Mongabay. 1 February 2024. https://news.mongabay.com/2024/02/small-secretive-highly-venomous-snake-seen-for-first-time-in-nepals-hills/. 

மேலும் வாசிக்க

[தொகு]
    • Boulenger, G.A. 1890. The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. Taylor & Francis. London. xviii, 541 pp.
    • Cantor, T.E. 1839. Spicilegium serpentium indicorum [parts 1 and 2]. Proc. Zool. Soc. London 7: 31–34, 49–55.
    • Slowinski, J. B. 1994. A phylogenetic analysis of Bungarus (Elapidae) based on morphological characters. Journal of Herpetology 28(4):440-446.