சிறியானி குலவன்ச
| பதக்க சாதனைகள் | ||
|---|---|---|
| மகளிர் தடகள விளையாட்டு | ||
| நாடு | ||
| ஆசிய சாம்பியன்ஷிப் | ||
| 1995 ஜகார்த்தா | 100 மீ தடை ஓட்டம் | |
| 1993 மணிலா | 100 மீ தடை ஓட்டம் | |
| 2002 கொழும்பு | 100 மீ தடை ஓட்டம் | |
| 1998 ஃபுகுவோகா | 100 மீ தடை ஓட்டம் | |
சிறியானி குலவன்ச (Sriyani Kulawansa, பிறப்பு: 1 மார்ச் 1970) ஓய்வுபெற்ற இலங்கைத் தடை தாண்டும் ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார். அட்லாண்டாவில் நடைபெற்ற 1996 கோடை ஒலிம்பிக் போட்டிகளின் காலிறுதிச் சுற்றில் இவர் 12.91 வினாடிகளில் ஓடி, தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவு செய்தார்.
எசுப்பானியாவில் நடைபெற்ற 1992 ஒலிம்பிக் போட்டிகளில், தனது 22வது வயதில் இவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அமெரிக்காவில் நடைபெற்ற 1996 ஒலிம்பிக் போட்டிகளில், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் 12.91 வினாடிகளில் தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவுசெய்து, இவர் காலிறுதிக்கு முன்னேறினார். 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டிகள் இவரது இறுதி ஒலிம்பிக் போட்டிகள் ஆகும்.
ஆசிய போட்டிகளில் இவர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார். 1998-ஆம் ஆண்டில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டாா். இவர் பொதுநலவாயப் போட்டிகளில் வெள்ளியும், ஆசியப் போட்டிகளில் வெண்கலமும் வென்றார். 1989 முதல் 2004 வரை 70-இற்கும் மேற்பட்ட பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இவர், தெற்காசியப் போட்டிகளில் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்திற்கான சாதனையை இன்றும் தக்கவைத்துள்ளார்.
தொடக்க வாழ்க்கை
[தொகு]சிறீயானி குலவன்சா தனது குழந்தைப் பருவத்தை "எங்கள் வீட்டின் வாகனம்" என்று வர்ணிக்கிறார். இவர் ஒரு குன்றின் மீது அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து மளிகைப் பொருட்களை வாங்க ஓடிச் செல்வது வழக்கம். இங்குதான் இவர் விளையாட்டின் மீதான தனது "ஆற்றலையும் காதலையும்" உணர்ந்தார்.
இவர் தனது ஆரம்பப் பள்ளி கல்வியை உடகெந்தலாவ தொடக்கப் பள்ளியில் முடித்து, 5-ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வில் தேர்ச்சி பெற்று இப்பகமுவ மத்திய கல்லூரியில் சேர்ந்தார். இங்கு இவர் பெண்களுக்கான தடகளம், எல்லே, வலைப் பந்தாட்டம் மற்றும் கைப்பந்து ஆகிய நான்கு விளையாட்டுகளிலும் பங்கேற்று, இவை அனைத்திலும் அகில இலங்கை வாகையாளர் பட்டத்தை வென்றார். 1989-ஆம் ஆண்டில் தடகளம், கைப்பந்து, வலைப்பந்தாட்டம் ஆகியவற்றில் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதையும் வென்றார். இவர் தேசிய அளவில் நுழைந்தபோது, தடகளத்தில் கவனம் செலுத்துவதற்காக வலைப்பந்தாட்டம், கைப்பந்து விளையாட்டுகளைக் கைவிட வேண்டியிருந்தது
இவர் இலங்கையின் குருணாகல் மாவட்டத்தில் உள்ள தொலைதூரப் பகுதியான மெல்சிரிபுரவில் வளர்ந்தார்.[1]
தொழில்
[தொகு]1989 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சி அணியில் இருந்தபோது, பங்கேற்பாளர்கள் பற்றாக்குறையால் உயரம் தாண்டுதல் போட்டி ரத்துச் செய்யப்பட்டதை இவர் அறிந்தார். ஆனால், தடை தாண்டும் போட்டிக்கு மாறும்படி தன்னை ஊக்குவித்ததற்காகத் தனது பெற்றோருக்கும் பயிற்சியாளர் டெர்வின் பெரேராவுக்கும் இவர் நன்றி கூறுகிறார்.
1998 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றதையே தனது மிகப்பெரிய தொழில்முறை சாதனையாக இவர் விவரிக்கிறார்.
2004 ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், சிறீயானி தனது 34-ஆவது வயதில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தனக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதையும், மற்றொரு விளையாட்டு வீரருக்கு வாய்ப்பளிப்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் இவர் கூறுகிறார்.
ஓய்வுக்குப் பிறகு, மாணவர்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காகக் கல்வி அமைச்சகத்தில் திட்ட அதிகாரியாகப் பணியாற்ற இவர் அழைக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hurdles star Kulawansha says Lanka has medal potential . Sunday Times Sri Lanka. Retrieved on 2013-10-27.
- ↑ www.ceylonathletics.com (2018-10-22). "Sriyani Kulawansha – Sri Lanka's best Hurdler - Ceylon Athletics News". Sri Lanka Athletics News & information Portal | Fixtures | Results (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-04-14.