சிறியதே அழகு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறியதே அழகு
நூலாசிரியர்இ.எஃப் ஷூமாஸர்
வகைசுற்றுச்சூழலியல்
வெளியீட்டாளர்எதிர் வெளியீடு (சனவரி 1, 2011)
வெளியிடப்பட்ட நாள்
2011
பக்கங்கள்333 பக்.
ISBN978-9384646516
OCLC19514463
330.1 20
LC வகைHB171 .S384 1989

சிறியதே அழகு: மனிதனை முன்னிறுத்தும் பொருளாதாரம் (Small Is Beautiful: Economics As If People Mattered), என்பது பிரித்தானியப் பொருளியல் வல்லுநர் இ. எஃபு. ஷூமாசர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

உலகத்திலிருக்கும் ஏழைகளுக்கு பெருந்தொழில் உற்பத்தி (Mass production) தேவையில்லை. பெருமளவு மக்கள் பங்கேற்கும் பொருள் உற்பத்தியே (Production by masses) அவர்களுக்குத் தேவை என்பதை வலியுறுத்துகிறார்.

சிறியதே அழகு எனும் சொல்லாடலை, பெருமூலதனமும் உயரிய தொழில்நுட்பமுமே மானுடத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற மாயையை தகர்க்கப் பயன்படுத்துகிறார். ஆற்றல் பற்றாக்குறை, புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு எழ ஆரம்பித்த காலமாதலால், 1973ஆம் ஆண்டு வெளிவந்த முதற்பதிப்பு மேற்கத்திய பொருளாதார மேதைகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. வாதங்களும் எதிர் வாதங்களும் முன்னெடுத்து வைக்கப்பட்டன. 'The Times literary supplement' (தி டைம்ஸ் லிட்டெரி சப்பலிமென்ட்) இதழ் 'சிறியதே அழகு' நூலை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் வந்த வெளியீடுகளில் சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 100 நூல்களில் ஒன்றாக வரிசைப்படுத்தியது.

தமிழில்[தொகு]

தமிழில் இந்த நூல் எம். யூசுப் ராஜாவின் மொழிப்பெயர்பில் 2011 இல் எதிர் வெளியீடு பதிப்பகத்தினினால் சிறியதே அழகு என்ற பெயரில் முதல் பதிப்பாக வெளிவந்தது.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "சிறியதே அழகு". கட்டுரை. http://www.sramakrishnan.com/?p=2851. பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறியதே_அழகு_(நூல்)&oldid=3938689" இலிருந்து மீள்விக்கப்பட்டது