சிறிபாத சுப்ரமண்ய சாத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறிபாத சுப்ரமண்ய சாத்திரி
பிறப்புஏப்ரல் 23, 1891(1891-04-23) [1]
போலமுரு, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா, இந்தியா
இறப்பு25 பெப்ரவரி 1961(1961-02-25) (அகவை 69)
ராஜமன்றி
பணிஎழுத்தாளர்
ராஜமன்றியில் வேதகிரி இராம்பாபுவால் நிறுவப்பட்ட சிறிபாத சுப்பிரமணியத்தின் சிலை

சிறிபாத சுப்ரமண்ய சாத்திரி (Sripada Subrahmanya Sastry)1891-1961) இவர் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தெலுங்கு எழுத்தாளர் ஆவார் [2] [3] சிறுகதைகள், புதினங்கள், இலக்கிய கட்டுரைகள் ஆகியவை இவரது முக்கிய படைப்புகளில் அடங்கும். மேலும் இவர் கவனகத்தையும் நிகழ்த்தினார். [4] தெலுங்கு இலக்கியத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளால் இவர் அடுனிகா கதா சக்ரவர்த்தி (நவீன சிறுகதைகளின் அரசன்) என்று அழைக்கப்படுகிறார். [5] இவர் வால்மீகி ராமாயணம் முழுவதையும் தெலுங்கு உரைநடைக்கு மொழிபெயர்த்தார். [6] இவர் பிரபுத்த ஆந்திரா என்ற பத்திரிகையை ஒன்பது ஆண்டுகள் நடத்தி வந்தார். [7]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுப்ரமண்ய சாத்திரி 1891 ஏப்ரல் 23 அன்று ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் போலமுருவில் இலட்சுமிபதி சோமயாஜுலு மற்றும் மகாலட்சுமி சோடம்மா ஆகியோருக்கு ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். [4] ஒரு வேத அறிஞரான இவரது தந்தை இவரை சமசுகிருதத்தில் பாரம்பரிய இந்து வேதங்களைத் தவிர வேறு எதையும் படிக்க அனுமதிக்கவில்லை. தனது தந்தையின் விருப்பப்படி பாரம்பரிய கல்வியை முடித்த இவர் பின்னர் முறையான கல்வியைத் தொடர்ந்தார்.

படைப்புகள்[தொகு]

சுப்ரமண்ய சாத்திரி 75 கதைகள் எழுதினார். இவரது கதைகளை காதல், கலாச்சாரம், புத்திமதி, குடும்ப வாழ்க்கை, குற்றச்செயல், மொழியியல், வரலாறு போன்ற தலைப்புகளாக பிரிக்கலாம். மேலும், சிறிபாதா பல கவிதைகள், புதினங்கள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் மற்றும் மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில: அதபாலி, ரக்‌ஷா பந்தனா, ராஜராஜு, கலாம்போட்டு, வீரபுஜா, வீரங்கனா, மகாபக்த விஜயம், ஆயுர்வேத யோகா முக்தாவலி, வைத்யகரனய வாகைரா போன்றவை.

சாத்திரி தனது சுயசரிதை, அனுபவங்கள் மற்றும் நினைவுகளை எட்டு தொகுதிகளாக வெளியிட விரும்பினார். ஆனால் சாத்திரியின் அகால மரணத்துடன், அது மூன்று தொகுதிகளுக்குள் சிக்கிக்கொண்டது. இவரது படைப்புகள் ஆந்திரப்பிரதேசப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் உள்ளன.

இறப்பு[தொகு]

சுப்ரமண்யாஸ்திரி 1961 பிப்ரவரி 25, அன்று ராஜ மகேந்திரவரத்தில் காலமானார்.

படைப்புகள்[தொகு]

  • அனுபவலு ஞாபகலுனு (அனுபவங்களும் நினைவுகளும்)

குறிப்புகள்[தொகு]

  1. Poranki, Dakshina Murthy (2005). Bharateeya Sahitya Nirmathalu Sripada Subrahmanya Sastry (1 ). New Delhi: Sahitya Akademi. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-260-2157-8. 
  2. Dutt, Kartik Chandra (1999). "Who's who of Indian Writers, 1999: A-M". Sahitya Akademi. 5 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. Śāstri, Śrīpāda Subrahmaṇya (1999). "A New Glimpse: Short Stories from South India". Sterling Paperback. 5 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 Punnamaraju, Nageswara Rao (24 May 2014). "జాతి కోసం తపించిన కథకుడు శ్రీపాద సుబ్రహ్మణ్య శాస్త్రి". Sakshi. 5 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "A collection of Sripadas short stories". The Hans India. 5 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  6. Rao, Govindaraju Ramakrsihna (14 August 2014). "Universal appeal". The Hindu. 5 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  7. Pouthukuchi, Surya Narayana Murthy. "SRIPADA SUBRAHMANYA SASTRI". yabaluri.org. 6 July 2018 அன்று பார்க்கப்பட்டது.