சிகாகோ பெருந்தீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:46, 6 மே 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("[[File:Chicago-fire1.jpg|thumb|300px|சிகாகோ காட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
சிகாகோ காட்டுத்தீயின் ஓவியம்.

சிகாகோ காட்டுத்தீ அக்டோபர் மாதம் 8ஆம் தேதி 1871ஆம் ஆண்டு எரிய ஆரம்பித்து அம்மாதம் பத்தாம் தேதி வரை எரிந்தது. நூற்றுக்கணக்கானவர்களை எரித்து சிகாகோவின் நான்கு சதுர மைல்களில் உள்ள அனைத்தையும் எரித்து நாசப்படுத்தியது இத்தீ. ref name="WhatDoWeKnow">Bales, Richard (2004). "What do we know about the Great Chicago Fire?". பார்க்கப்பட்ட நாள் 2008-11-14.</ref> பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய தீயான இதனால் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டாலும் நகரத்தின் புனரமைப்பு வெகு வேகமாக செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக சிகாகோ உள்ளது.

சிகாகோவின் கொடியில் உள்ள இரண்டாம் நட்சத்திரம் இந்த காட்டுத்தீயை குறிக்கிறது.[1] இன்றைய நாள் வரை இந்த காட்டுத்தீ உருவான காரணத்தை யாரும் அறியவில்லை.

தொடக்கம்

1868 சிகாகோவின் வரைபடம், காட்டுத்தீயினால் அழிந்த பகுதியை காட்டுவதற்காக திருத்தப்பட்டுள்ளது.

இத்தீ அக்டோபர் 8ஆம் தேதி காலை ஒன்பது மணி அளவில், 137 டேகோவென் தெருவிலுள்ள ஒரு சின்ன கிடங்கில் ஆரம்பித்தது.< ref>Bessie Louise Pierce (1957, rep. 2007). A History of Chicago: Volume III: The Rise of a Modern City, 1871–1893. Chicago: University of Chicago Press. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-66842-0. </ref> ஒரு செய்தித்தாள் நிருபரான மைகேல் அஹர்ன் என்பவர் இத்தீ ஒரு மாடு எரிவிளக்கை எட்டி உதைத்ததனால் உருவானது என்று கூறினார். ஆனால் 1893ஆம் ஆண்டில் தான் சொன்னவை உண்மையில்லை என்று அறிவித்தார்.[2]

இந்த தீ சிகாகோ நகரத்தின் அதிகமான மரக்கட்டை பயன்பாடு மற்றும் தென்மேற்கு காற்றினாலும் அதிகமாக ஏரிந்தது. சீக்கிரமாக தடுக்காதலாலும் முன்னதாக நடந்த தீவிபத்தில் சோர்வடைந்த தீயணைப்பவர்களாலும் தீயின் பரப்பளவு அதிகமானது.[3] இரண்டு நாட்கள் முழுவதும் தீயனைப்பவர்கள் தீயை அணைப்பதில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பெய்த மழையினால் தீ முற்றிலுமாக அனைக்கப்பட்டுவிட்டது. 300 மக்கள் இறந்ததாகவும், 3 இலட்சம் மக்கள் தெருவிற்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.

தீ பரவுதல்

தீயின் பின், 1871இல் சிகாகோ
சிகாகோவின் தண்ணீர்த்தொட்டி

நகரத்தின் தீயணைப்புத்துறையினர் காலை சுமார் பத்து மணியளவில் அழைக்கப்பட்டனர். அவர்களின் தவறால் தீ மேலும் பரவியது.

தீயின் பின் சிகாகோ தீயணைப்புத்துரையின் முன்னிருக்கும் சிலை
சிகாகோவின் தீயணைப்புத்துரையின்முன் தீயினை நினைவூட்டும் குறி
சிகாகோவின் கொடி

தீயை தாங்கிய கட்டடங்கள்

  • தூய மைகேல் சர்ச்
  • சிகாகோவின் தண்ணீர்த்தொட்டி
  • சிகாகோ அவென்யூ நீரேற்று நிலையம்


குறிப்புகள்

  1. "Municipal Flag of Chicago". Chicago Public Library. 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-04.
  2. "The O'Leary Legend". Chicago History Museum. பார்க்கப்பட்ட நாள் 2007-03-18.
  3. "The fire Fiend"". Chicago Daily Tribune: pp. 3. 1871-10-08. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகாகோ_பெருந்தீ&oldid=759144" இலிருந்து மீள்விக்கப்பட்டது