எட்வர்டு டர்னர் பென்னெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்வர்டு டர்னர் பென்னெட் (Edward Turner Bennett)(6 ஜனவரி 1797 - 21 ஆகஸ்ட் 1836) என்பவர் இங்கிலாந்து நாட்டினைச் சார்ந்த விலங்கியல் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தாவரவியலாளர் ஜான் ஜோசப் பென்னெட்டின் மூத்த சகோதரர் ஆவார்.[1]

பென்னெட் ஹாக்னியில் பிறந்தார். இவர் அறுவை சிகிச்சை நிபுணராகப் பயிற்சி பெற்றார். ஆனால் இவர் விலங்கியல் பாடத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். 1822ஆம் ஆண்டில் இவர் பூச்சியியல் சமூகத்தை நிறுவ முயன்றார். இந்த முயற்சியானது பின்னர் லின்னேயன் சமூகத்துடன் தொடர்புடைய லண்டன் விலங்கியல் சமூகமாக மாறியது. இதன் செயலளாரக பென்னெட் 1831 முதல் 1836 வரை செயல்பட்டார்.[2]

பென்னெட் படைப்புகளில் தி டவர் மெனகேரி (1829) மற்றும் தி கார்டன்ஸ் அண்ட் மெனகேரி ஆஃப் விலங்கியல் சங்கம் (1831) அடங்கும். இவர் ஜி. டி. லேயுடன் இணைந்து , பீச்சேயின் பயணத்தின் விலங்கில் என்பதில் மீன்கள் (1839) என்ற பகுதியையும் எழுதினார்.

1835ஆம் ஆண்டில், பென்னெட் புதிய வகை ஆப்பிரிக்க முதலையை விவரித்தார். இதன் அறிவியற் பெயர் மெசிஸ்டாப்சு லெப்டோர்ஹைஞ்சசு ஆகும். இந்தப் பெயரானது 2018-ல் உறுதிப்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bennett, Edward Turner (1797-1836), zoologist by J. C. Edwards in Dictionary of National Biography online (accessed 21 July 2008)
  2. Mullens, W. H., and H. Kirke Swann. A Bibliography of British Ornithology from the Earliest Times to the End of 1912. London, England: Macmillan, 1917. (Accessed on 5/10/2014.)

வெளி இணைப்புகள்[தொகு]