இலங்கை கடவுச்சீட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை கடவுச்சீட்டு
சமகால இலங்கை கடவுச்சீட்டின் முன் அட்டை
வகைகடவுச்சீட்டு
வழங்கியோர் இலங்கை
நோக்கம்அடையாளப்படுத்தல்
தகுதிஇலங்கை குடியுரிமை
காலாவதிவழங்கப்பட்டதிலிருந்து 10 வருடங்கள்

இலங்கை கடவுச்சீட்டு வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்காக இலங்கை குடியுரிமை பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. இலங்கை கடவுச்சீட்டினை வழங்கும் பொறுப்பு இலங்கை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்கு உள்ளது.

வகைகள்[தொகு]

  • இராஜ தந்திர கடவுச்சீட்டு - இலங்கை இராஜ தந்திரிகள், உயர் அரச அலுவலக பதவியில் உள்ளவர்கள் மற்றும் இராஜ தந்திர முகவர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு - இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • வழமையான கடவுச்சீட்டு - வழமையான பயணங்களுக்காக வழங்கப்படுகிறது.
    • எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியானது
    • குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் செல்லுபடியானது
  • அவசர அத்தாட்சி
    • இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் செல்லுபடியானது (ஆன்மிகச் பயணம், மருத்துவ பரிகாரம் போன்றவற்றுக்காக)
    • சவுதி அரேபியாவுக்குச் செல்லுபடியானது (ஹஜ், Umrah ஆன்மிகச் பயணத்திற்காக)
  • இயந்திரத்தினால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டுக்கள் - சிறப்பு சூழ்நிலையின் கீழ் இலங்கை தூதுக்குழுக்களுக்கு வழங்கப்படுகிறது.[1]

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் புதிதாக வழங்கப்பட்ட சகல கடவுச்சீட்டுக்களும் வழங்கப்பட்டதிலிருந்து அதிகபட்சம் 10 வருடங்களுக்கு செல்லுபடியானதாகும்.

கடவுச்சீட்டு குறிப்பு[தொகு]

ஒவ்வொரு இலங்கை கடவுச்சீட்டும் அதன் உட்புற அட்டையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் எழுதப்பட்டிருக்கும் :

சிங்களம்:

මෙය දරන්නාට අවහිර බාධාවලින් තොරව නිදහසේ ගමන් කිරීමට සහ අවශ්‍යවන ආධාර ද ආරක්ෂාව ද සලස්වා දෙන ලෙසත් අදාල වගකීම් දරන සියලු දෙනාගෙන්ම ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ජනාධිපති ඉල්ලුම්කර ද අපේක්ෂාකර ද සිටී.

தமிழ்:

இதனை வைத்திருப்பவர் தங்குதடையின்றி இலகுவாகப் பிரயாணஞ் செய்ய அனுமதிக்குமாறும் வேண்டிய உதவியையும், பாதுகாப்பையும் அளிக்குமாறும் இது தொடர்புடைய சகலரையும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி அவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.

ஆங்கிலம்:

The President of the Democratic Socialist Republic of Sri Lanka requests and requires all those whom it may concern to allow the bearer to pass freely without let or hindrance and to afford the bearer such assistance and protection as may be necessary.

இதனையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது 2012-06-10 at the வந்தவழி இயந்திரம்கடவுச்சீட்டினை விநியோகித்தல்

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_கடவுச்சீட்டு&oldid=3644668" இலிருந்து மீள்விக்கப்பட்டது