"மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
99 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==ஐதீகங்கள்==
 
[[படிமம்:Poompavai Koyil.jpg|thumb|200px|பூம்பாவை கோயில்]]
திருஞானசம்பந்தர் வாழ்ந்தகாலத்திலே, சிவனேசச் செட்டியார் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் [[பாம்பு]] தீண்டி அப்பெண் மரணமாகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் [[மயிலாப்பூர்]] வந்தபோது, செட்டியார் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீஸ்வரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் ஐதீகம். இன்றைய கபாலீஸ்வரர் கோயிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருப்பதைக் காணமுடியும். இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான [[சிலை]]கள் மூலம் விளக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/96390" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி