மாறன் பொறையனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"மாறன் பொறையனார் [[பதினெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:57, 22 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

மாறன் பொறையனார் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான ஐந்திணை ஐம்பதை எழுதியவர். மாறன் என்பதை இவருடைய தந்தையின் பெயரெனக் கருதிடில் பொறையனார் என்பதை இவர் இயற்பெயர் எனலாம். இவர் இயற்றிய வேறு நூல்கள் ஏதும் கிடைத்திலது.

மாறன் என்பது பாண்டியர் பெயரையும் பொறையன் என்பது சேரர் குடிப் பெயரையும் குறிக்கிறது. பொறையன் என்பதற்குப் பொறுமையை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

தனது நூலின் முதற் பாடலிலேயே திருமால், முருகன்,சிவன் என்னும் மூன்று கடவுளரின் பெயர்களும் இடம்பெறும் படி பாடியிருப்பமையின் இவர் சமணரோ பௌத்தரோ அல்லர் என்பது புலனாகிறது. [1]

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறன்_பொறையனார்&oldid=958650" இலிருந்து மீள்விக்கப்பட்டது