சிலேடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
7,127 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
*வேண்டேன் பெருங்காயம், பெருங்காயம் என்பது பெரிய + காயம், அல்லது பெரிய உடம்பு, அதாவது, மீண்டும் மீண்டும் பிறந்து வினையினால் அவதிப்படும் இந்த பெரிய உடம்பைக் கேட்க மாட்டேன்..

என்று பொருள்படுகின்றது.

===யாழ்ப்பாணத்தின் ஊர்ப் பெயர்களைக் கொண்ட ஒரு சிலேடை[http://eelamlife.blogspot.com/2009/08/blog-post_625.html]===
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலுள்ள]] மாவட்டத்தின் ஊர் பெயர்களை வைத்து வரும் [[கவிதை]] வடிவிலான சிலேடை. இங்கே உள்ள ஊர்ப் பெயர்களில், வேறு அர்த்தம் பொதிந்திருக்கும். இதை எழுதியவர் யாரென்பது தெரியவில்லை.

முடிவிலாதுறை '''சுன்னாகத்தான்''' வழி

முந்தித் '''தாவடி''' '''கொக்குவில்''' மீது வந்தடைய

ஓர் பெண் '''கொடிகாமத்தாள்''' அசைந்து

'''ஆனைக் கோட்டை''' வழி

கட்டுடை விட்டாள்

'''உடுவிலான்''' வர

'''பன்னாலையான்''' மிக உருத்தனன்

கடம்புற்ற '''மல்லாகத்தில்'''

இடை விடாது எனை அணையென

'''பலாலி''' கண் சோர வந்தாள்

ஓர் '''இளவாலை'''யே

*முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
#முடிவிலாதுறை = முடிவற்று உறைந்திருக்கும், அல்லது குடி கொண்டிருக்கும்
#சுன்னாகம் = சுன் + நாகத்தான் = வெள்ளை மலை (இமய மலை = கைலயங்கிரி)
#வழி = வழியில் வந்தவன்

இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன்,

*முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய
#முந்தித் தாவடி = முன்னே தாவி வரும்
#கொக்குவில் மீது வந்தடைய

முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, (மாவிட்டபுரத்தில் வீற்றிருக்கும் முருகன் குதிரையில் வருவாராம்).....

*கொடிகாமத்தாள் ஆனைக்கோட்டை வழி கட்டுடை விட்டாள்
#கொடி + காமத்தாள் = கொடி போன்றை இடையுடைய + ஆசை கொண்டவள்
#ஆனைக் கோட்டை வழி = பெரிய கோட்டை போன்ற மார்பகம் வழி
#கட்டுடை விட்டாள் = கண்ணீர் கட்டுடைந்து வழிய நின்றாள்

மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்......

*உடுவிலான் வர பன்னாலையான் மிக உருத்தனன்
#உடு = நட்சத்திரம் /நிலவு
#பன்னாலை = கரும்பு
#உருத்தனன் = தொல்லை கொடுத்தான்

நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்,

*கடம்புற்ற மல்லாகத்தில் இடைவிடாது எனை அணையென
#கடம்புற்ற = கடம்பு எனும் பூக்களாலான
#மல்லாகத்தில் = மார்பகத்தில்
#இடை விடாது = இடைவெளியெதுவுமில்லாது
#எனை அணையென = என்னை அணைத்துக் கொள்ளென்று

கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்ளென்று,

*பலாலி கண் சோர வந்தாள் ஓர் இளவாலையே
#பலாலி கண் = பல + ஆலி = பல கண்ணீர்த் துளிகள்
#சோர = சொரிந்து
#இளவாலை = இளம் வயதுடைய வாலைப் பெண் = குமரிப் பெண்

பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.

முழுமையான அர்த்தம்:
இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்...... "நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்" என்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.

==ஆதாரம்==
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/935452" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி