தேசியப் பாடசாலை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[இலங்கை]]யில் '''தேசியப் பாடசாலை''' (''national school, {{lang-si|ජාතික පාසල}}) எனப்படுபவை [[இலங்கை]] அரசின் கல்வியமைச்சின் கீழுள்ள, நடுவண் அரசுக்குட்பட்ட பாடசாலையாகும். தேசிய பாடசாலைகளில் இரண்டாம் நிலைக் கல்வியே பெரும்பாலும் போதிக்கப்படுகின்றது. ஆயினும், சிறுபான்மையாக முதற்தரக் கல்வியும் சில பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. [[1985]] ஆம் ஆண்டிலேயே இந்த தேசிய பாடசாலைக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. ஆரம்பக் கட்டமாக நாடாளாவிய ரீதியில் 18 பாடசாலைகள் இத்திட்டத்திற்குட்பட்டது.
[[இலங்கை]]யில் '''தேசியப் பாடசாலை''' (''national school'', {{lang-si|ජාතික පාසල}}) எனப்படுபவை [[இலங்கை]] அரசின் கல்வியமைச்சின் கீழுள்ள, நடுவண் அரசுக்குட்பட்ட பாடசாலையாகும். தேசிய பாடசாலைகளில் இரண்டாம் நிலைக் கல்வியே பெரும்பாலும் போதிக்கப்படுகின்றது. ஆயினும், சிறுபான்மையாக முதற்தரக் கல்வியும் சில பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. [[1985]] ஆம் ஆண்டிலேயே இந்த தேசிய பாடசாலைக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. ஆரம்பக் கட்டமாக நாடாளாவிய ரீதியில் 18 பாடசாலைகள் இத்திட்டத்திற்குட்பட்டது.


== வரலாறு ==
== வரலாறு ==

08:34, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கையில் தேசியப் பாடசாலை (national school, சிங்களம்: ජාතික පාසල) எனப்படுபவை இலங்கை அரசின் கல்வியமைச்சின் கீழுள்ள, நடுவண் அரசுக்குட்பட்ட பாடசாலையாகும். தேசிய பாடசாலைகளில் இரண்டாம் நிலைக் கல்வியே பெரும்பாலும் போதிக்கப்படுகின்றது. ஆயினும், சிறுபான்மையாக முதற்தரக் கல்வியும் சில பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டிலேயே இந்த தேசிய பாடசாலைக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. ஆரம்பக் கட்டமாக நாடாளாவிய ரீதியில் 18 பாடசாலைகள் இத்திட்டத்திற்குட்பட்டது.

வரலாறு

1987 ஆம் ஆண்டு மாகாண சபைகளின் அதிகாரப் பரவாலாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாகவே பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக மாற்றப்பட்டன. ஆயினும் இதற்கு முன்னரேயே (1985) ஆம் ஆண்டு நடுவண் அரசாங்கம் இதற்கான முன் ஆயத்தங்களைச் செய்திருந்தது. இதில் 18 பிரபலமான 18 பாடசாலைகள் இதற்கென கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டன. அவையாவன:

  1. பாடசாலை மாணாக்கர் தொகை 1000 இலும் கூடுதலாக இருக்க வேண்டும்.
  2. கலை, வர்த்தக, விஞ்ஞானப் பிரிவுகளை உடைத்தாய் இருக்க வேண்டும்.
  3. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர) ப் பெறுபேறு, பல்கலைக் கழக அனுமதிக்காகவேனும் இருத்தல் வேண்டும்.
  4. மாணாக்கருக்கேற்றாற் போல கட்டிடம், தளபாடம் மற்றும் ஏனைய வளங்களும் போதியாய் இருத்தல் வேண்டும்.
  5. கடந்த மூன்றாண்டுகளில் பாடசாலை அபிவிருத்திக்காக தூரநோக்குடன் கூடிய பாடசாலை அபிவிருத்திச் சங்கமொன்று மற்றும் பழைய மாணாக்கர் சங்கமொன்று இருத்தல்.
  6. பொதுவாக தேர்வுசெய்யப்படும் பாடசாலை அப்பகுதியில் பேர் பெற்றதாய் இருத்தல் வேண்டும்.

இவ்வாறான தகைமைகளை உடைய பாடசாலைகளே முதற்கட்டமாக தேசிய பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டன. கொழும்பு மற்றும் பிரபல நகரங்களிலுள்ள பாடசாலைகள் இதில் உள்வாங்கப்பட்டன.ஐந்து ஆண்டுகளின் பின்னர் இதில் சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் நிறையப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் எனப் பெயர் மாற்றம் அடைந்தன. சிற்சிலவற்றுக்கே முழுத் தகைமையும் இருந்த போதிலும் அரசியல் செல்வாக்கினால் நாடெங்கிலும் இவ்வாறான பெயர் மாற்றப் பாடசாலைகள் தோற்றம் பெற்றன.

1990 ஆம் ஆண்டு தேசிய பாடசாலையாக மாற்றப்படுவதற்கான தகைமைகளாகப் பின்வருவன இருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசியப்_பாடசாலை_(இலங்கை)&oldid=928987" இலிருந்து மீள்விக்கப்பட்டது