ச. சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72: வரிசை 72:
===சிறப்பு விருதுகள்===
===சிறப்பு விருதுகள்===


1996 – மலாக்கா மாநில ஆளுநரின் பி.ஜே.கே விருது
* 1996 – மலாக்கா மாநில ஆளுநரின் பி.ஜே.கே விருது
1997 – கே.எம்.என் விருது
* 1997 – கே.எம்.என் விருது
2006 – ’டத்தோ’ எனும் உயரிய விருது
* 2006 – ’டத்தோ’ விருது


===அரசியல் வாழ்க்கை===
===அரசியல் வாழ்க்கை===

04:48, 16 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

டத்தோ
எஸ்.சுப்ரமணியம்
S.Subramaniam
மலேசிய இந்திய காங்கிரஸ்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2008
மலேசியர் நாடாளுமன்றம்
for சிகாமட்
பதவியில்
2008–2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1953
தைப்பிங்
அரசியல் கட்சிமலேசியா மலேசிய இந்திய காங்கிரஸ்
பாரிசான் நேசனல் பங்காளிக் கட்சி
உயரம்250px
துணைவர்டாக்டர் எஸ்.உமாதேவி
பிள்ளைகள்3
வாழிடம்கோலாலம்பூர்
வேலைமலேசியா நாடாளுமன்ற உறுப்பினர்
இணையத்தளம்(Pending)

டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மலேசிய அமைச்சரவையில் மனிதவள அமைச்சராகப் பதவி வகிக்கிறார். இவர் ம.இ.காவின் துணைத்தலைவரும் ஆவார். மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்து வெளிநாடுகளுக்கு அரசத் தூதுவராகச் சென்று வருகிறார். நாடு தழுவிய நிலையில் சமூகம் சார்ந்த நிகழ்வுகள், கலை இலக்கிய சமய விழாக்கள் போன்றவற்றில் மலேசிய இந்தியர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

மலேசியாவில் உள்ள தைப்பிங், கோலாகங்சார், தங்காக், மலாக்கா பொது மருத்துவமனைகளில் தோல் நிபுணத்துவ மருத்துவராகச் சேவை ஆற்றியவர். ஆன்மீகத் துறையில் அதிகமாக அக்கறை காட்டி வருகின்றார். அரசியல்வாதியான பின்னர் மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புகள், மலேசிய இந்துக்களின் ஆலய மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றார்.

வரலாறு

டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள தைப்பிங் நகரில் 1953 ஏப்ரல் 1-இல், கே.வி.சதாசிவம் – கல்யாணி தம்பதியருக்கு மூத்த புதல்வராகப் பிறந்தார். இவருடைய தந்தையார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்கு உடன்பிறப்புகள் நால்வர்.

1959-இல் பினாங்கில் உள்ள வெஸ்ட் லைன் தொடக்கப் பள்ளியில் தன்னுடைய பள்ளி வாழ்க்கையைத் தொடங்கினார். பினாங்கு ’ஃபிரி ஸ்கூல்’ எனும் ஆங்கில இடைநிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். 1973 ஆம் ஆண்டு சிங்கப்பூர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். 1978-இல் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.

பின்னர் பிரித்தானிய அயர்லாந்தில் உள்ள அரச மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.சி.பி Member of Royal College of Physicians எனும் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். தொடர்ந்து இங்கிலாந்தில் படித்து தோல் மருத்துவ நிபுணத்துவ பட்டமும் பெற்றார்.

தோல் நிபுணத்துவ மருத்துவர்

டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மலேசியாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் தோல் நிபுணத்துவ மருத்துவராக ஏழு ஆண்டுகள் சேவை ஆற்றினார். பின்னர், மலாக்காவில் சொந்தமாக தோல் மருத்துவ இல்லத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

டாக்டர் எஸ்.உமாதேவியை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்ற இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 1995 ஆம் ஆண்டு மலாக்கா, ஊஜோங் பாசிர் கிளையின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

சமூக அரசியல் பொறுப்புகள்

  • 1985 – 1992: மலாக்கா மாநில இந்து சங்க இளைஞர் பகுதி தலைவர்.
  • 1992 – 1997: மலாக்கா மாநில மருத்துவ சங்கத் தலைவர்.
  • 1996 – 1997: மலாக்கா மாநில மாநகராட்சி உறுப்பினர்
  • 1997 – 2003: மலாக்கா மாநில ம.இ.கா பொருளாளர்.
  • 1997 – 2003: மலாக்கா மாநில ம.இ.கா. சமயப் பிரிவுத் தலைவர்.
  • 2003 – 2008: மலாக்கா மாநில ம.இ.கா. துணைத் தலைவர்.

சிறப்பு விருதுகள்

  • 1996 – மலாக்கா மாநில ஆளுநரின் பி.ஜே.கே விருது
  • 1997 – கே.எம்.என் விருது
  • 2006 – ’டத்தோ’ விருது

அரசியல் வாழ்க்கை

டாக்டர் எஸ்.சுப்ரமணியம் 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ம.இ.கா தேசியப் பேராளர் மாநாட்டில் மத்திய செயலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டார். 2006-இல் இருந்து 2009 செப்டம்பர் வரையில் ம.இ.கா தேசியப் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று இருந்தார்.

டாக்டர் எஸ்.சுப்ரமணியம் 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிகாமட் தொகுதியில் வெற்றி பெற்று மனிதவள அமைச்சராக நியமனம் பெற்றார். அடுத்த ஆண்டு செப்டம்பர் 12-இல் நடைபெற்ற ம.இ.கா தேசியப் பேராளர் மாநாட்டில் மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக, முதல் நிலையில் தேர்ந்தெடுக்க்ப் பட்டார். 2010 டிசம்பர் 6-இல் இருந்து ம.இ.கா தேசியத் துணைத் தலைவராக டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பொறுப்பேற்று உள்ளார்.

இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவையின் இந்தியர்களுக்கான சிறப்புக்குழு 2008-இல் உருவாக்கம் கண்டது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அப்துல் ரசாக் தலைமை வகிக்கும் அந்தக் குழுவுக்கு மனிதவள அமைச்சு செயலகமாக விளங்குகிறது. டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சிறப்பு அமலாக்கப் பிரிவின் தலைவராகச் செயல் படுகிறார்.

இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள்

இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, அவர்களின் வளமான வாழ்வுக்கு உதவுவதில் அந்தச் சிறப்பு அமலாக்கப் பிரிவு அக்கறை காட்டி வருகின்றது. அவர் பொறுப்பேற்ற பிறகு இரண்டே ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புகளுக்கு அரசாங்கம் 130 மில்லியன் ரிங்கிட்டை மான்யமாக ஒதுக்கீடு செய்தது.

இந்து ஆலயங்களின் மறுசீரமைப்புக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதில் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தீவிரம் காட்டி வருகிறார். இதைத் தவிர மலேசிய இந்து ஆலயங்களில் சேவை செய்யும் அர்ச்சகர்களுக்கு நான்கு முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அப்பயிற்சிகளுக்கு மனிதவள அமைச்சு உறுதுணையாக இருந்திருக்கிறது.

இளைஞர்களின் தொழில் திறன் வளர்ச்சி

இந்திய இளைஞர்களின் தொழில் திறன் வளர்ச்சிக்காக 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு பெறவும், இந்திய மாணவர்களுக்கு அரசாங்கக் கல்விச் சலுகை நிதி கிடைக்கவும் அமைச்சர் எனும் வகையில் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பலவகைகளில் உதவிகள் செய்துள்ளார். மலேசிய இந்தியச் சமுதாயம் பயன் பெறும் வகையில் இவருடைய சேவைகள் தொடர்கின்றன.

மலேசிய இந்தியச் சமுதாயம் பயன் பெறும் வகையில் இவருடைய சேவைகள் தொடர்கின்றன. டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மலேசிய இந்தியர்களுக்கு தேவையானவற்றை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தருகிறார் என்று பெரும்பாலான மலேசிய இந்தியர்கள் மனநிறைவு அடைகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._சுப்பிரமணியம்&oldid=928773" இலிருந்து மீள்விக்கப்பட்டது