கர்தினால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய இடுகை
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:CardinalCoA PioM.svg|thumb|right|180px|கர்தினாலின் பதவிக் கேடயம் அதன் மேல்பகுதியில் காணப்படும் சிவப்பு நிற விரிதொப்பியால் அடையாளம் காட்டப்படும். தொப்பியின் இருபக்கங்களிலும் முறையே 15 குஞ்சங்கள் தொங்கும். குறிக்கோளுரையும் இணைக்கப்படுவது வழக்கம்.]]
[[File:CardinalCoA PioM.svg|thumb|right|180px|கர்தினாலின் பதவிக் கேடயம் அதன் மேல்பகுதியில் காணப்படும் சிவப்பு நிற விரிதொப்பியால் அடையாளம் காட்டப்படும். தொப்பியின் இருபக்கங்களிலும் முறையே 15 குஞ்சங்கள் தொங்கும். குறிக்கோளுரையும் இணைக்கப்படுவது வழக்கம்.]]
'''கர்தினால்''' (''Cardinal'') என்னும் பெயர் கத்தோலிக்க திருச்சபையில் உயர்நிலையிலுள்ள ஒரு வகை அதிகாரிகளைக் குறிக்கிறது. கர்தினால் பதவியிலுள்ளவர் பொதுவாக ஆயர் பட்டம் பெற்றவராக இருப்பார். எல்லாக் கர்தினால்களையும் உள்ளடக்கிய குழுமம் "கர்தினால் குழு" (''College of Cardinals'') என்று அழைக்கப்படுகிறது. கர்தினால்களைத் திருச்சபையின் இளவரசர்கள் என்று கூறுவதும் உண்டு.<ref>[http://en.wikipedia.org/wiki/Cardinal_(Catholicism) கர்தினால்]</ref>
'''கர்தினால்''' (''Cardinal'') என்னும் பெயர் [[கத்தோலிக்க திருச்சபை]]யில் உயர்நிலையிலுள்ள ஒரு வகை அதிகாரிகளைக் குறிக்கிறது. கர்தினால் பதவியிலுள்ளவர் பொதுவாக ஆயர் பட்டம் பெற்றவராக இருப்பார். எல்லாக் கர்தினால்களையும் உள்ளடக்கிய குழுமம் "கர்தினால் குழு" (''College of Cardinals'') என்று அழைக்கப்படுகிறது. கர்தினால்களைத் திருச்சபையின் இளவரசர்கள் என்று கூறுவதும் உண்டு.<ref>[http://en.wikipedia.org/wiki/Cardinal_(Catholicism) கர்தினால்]</ref>


==பெயர்த் தோற்றம்==
==பெயர்த் தோற்றம்==

06:21, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

கர்தினாலின் பதவிக் கேடயம் அதன் மேல்பகுதியில் காணப்படும் சிவப்பு நிற விரிதொப்பியால் அடையாளம் காட்டப்படும். தொப்பியின் இருபக்கங்களிலும் முறையே 15 குஞ்சங்கள் தொங்கும். குறிக்கோளுரையும் இணைக்கப்படுவது வழக்கம்.

கர்தினால் (Cardinal) என்னும் பெயர் கத்தோலிக்க திருச்சபையில் உயர்நிலையிலுள்ள ஒரு வகை அதிகாரிகளைக் குறிக்கிறது. கர்தினால் பதவியிலுள்ளவர் பொதுவாக ஆயர் பட்டம் பெற்றவராக இருப்பார். எல்லாக் கர்தினால்களையும் உள்ளடக்கிய குழுமம் "கர்தினால் குழு" (College of Cardinals) என்று அழைக்கப்படுகிறது. கர்தினால்களைத் திருச்சபையின் இளவரசர்கள் என்று கூறுவதும் உண்டு.[1]

பெயர்த் தோற்றம்

பொது இறைவேண்டல் நிகழ்த்தும்போது கர்தினால் அணியும் உடைத் தொகுதி: கர்தினால் வால்ட்டர் காஸ்பெர் (இடது); கர்தினால் டன்னீல்ஸ் (வலது).

"கர்தினால்" என்னும் சொல் இலத்தீன் மொழியில் "cardo, cardinis (gen.)" என்னும் சொல்லிலிருந்து பிறப்பதாகும். அச்சொல் "அச்சாணி" என்னும் பொருளுடைத்தது. திருச்சபையில் அச்சாணி போன்று மைய இடம் வகிப்பவர்கள் என்னும் பொருளில் "கர்தினால்" என்னும் பட்டம் சிலருக்கு வழங்கப்படுகிறது.

கர்தினாலின் பணிகள்

கர்தினால் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்வதும், திருத்தந்தை வேண்டும்போது அவருக்கு தனியாகவோ, குழுவாகக் கூடியோ ஆலோசனை வழங்குவதும் கர்தினால்களின் பணிகளுள் அடங்கும்.

பெரும்பான்மையான கர்தினால்களுக்கு மேலதிக பணிகளும் உண்டு. மறைமாவட்டங்களை நிர்வகித்தல், உரோமைத் திருப்பீடத்தின் பேராயங்களுக்குத் தலைவராக இருத்தல் போன்ற பணிகளையும் கர்தினால்கள் செய்கின்றனர்.

திருத்தந்தையின் இறப்பாலோ பணித்துறப்பாலோ அவருடைய பணியிடம் வெறுமையாகும் வேளையில் புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கர்தினால்மார்களின் முக்கிய பணி ஆகும்.

திருச்சபையில் நிர்வாகப் பொறுப்பு

கி.பி. 1059இல் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உரோமையின் முக்கிய குருக்களிடமும், உரோமை நகரை அடுத்துள்ள ஏழு மறைமாவட்டங்களின் ஆயர்களிடமும் இருந்தது.

திருத்தந்தையின் இறப்பாலோ பணித்துறப்பாலோ அவருடைய பணியிடம் வெறுமையாகிய நிலையில், திருச்சபையின் அன்றாட நிர்வாகப் பொறுப்பு கர்தினால் குழுவிடம் இருக்கும்.

வயது எல்லை

இன்றைய திருச்சபைச் சட்டப்படி, திருத்தந்தைப் பணியிடம் வெறுமையாகின்ற வேளையில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் (papal conclave) பங்கேற்க வேண்டுமானால், கர்தினால் 80 வயதினைத் தாண்டாதவராக இருக்கவேண்டும்.

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்தினால்&oldid=919625" இலிருந்து மீள்விக்கப்பட்டது