இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63: வரிசை 63:


==முடிவுகள்==
==முடிவுகள்==
பண்டாரநாயக்காவின் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. பண்டாரநாயக்கா பிரதமர் ஆனார்.
[[எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வின் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. பண்டாரநாயக்கா பிரதமர் ஆனார். [[1956]] [[ஏபரல் 12]] இல் பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்றது.


{| border="1" cellpadding="4" cellspacing="1" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; text-align:right; border-collapse: collapse; font-size: 95%;"
{| border="1" cellpadding="4" cellspacing="1" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; text-align:right; border-collapse: collapse; font-size: 95%;"

04:23, 5 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

இலங்கையின் 3வது நாடாளுமன்றத் தேர்தல், 1956

← 1952 5-10 ஏப்ரல் 1956 1960 (மார்ச்) →

இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு 95 இடங்கள்
  First party Second party
  படிமம்:Swrd bandaranaike.gif
தலைவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா என். எம். பெரேரா
கட்சி மகாஜன எக்சத் பெரமுன லங்கா சமசமாஜக் கட்சி
தலைவரின் தொகுதி அத்தனகலை ருவான்வெல்லை
வென்ற தொகுதிகள் 51 14
மொத்த வாக்குகள் 1,046,277 274,204
விழுக்காடு 39.52% 10.36%

முந்தைய பிரதமர்

ஜோன் கொத்தலாவலை
ஐக்கிய தேசியக் கட்சி

பிரதமர்-தெரிவு

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
மகாஜன எக்சத் பெரமுன

இலங்கையின் 3வது நாடாளுமன்றத் தேர்தல் 1956 ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.

நீண்டகாலமாக இலங்கையை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இத்தேர்தல் ஒரு பெரும் சவாலாகக் காணப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆளும் கட்சியில் இருந்து பிரிந்து இலங்கை சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தார்.

பின்னனி

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஜோன் கொத்தலாவலை தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியிருந்தது. இதற்கிடையில், இலங்கை சுதந்திரக் கட்சி ஆங்கிலத்தை ஆட்சி மொழியில் இருந்து அகற்றி சிங்களத்தை ஆட்சிமொழியாக்குவதாக அறிவித்தது. இக்கோரிக்கையை ஆரம்பத்தில் எதிர்த்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி பின்னர் 1956 இன் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டது. இதனால் அது சிறுபான்மை இலங்கைத் தமிழரின் செல்வாக்கை இழந்தது.

திரொட்ஸ்கியவாதிகளான லங்கா சமசமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களம், தமிழ் இரண்டும் ஆட்சி மொழியாக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தன. தமிழ்க் கட்சிகள் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடர் வேண்டும் எனக் கேட்டனர்.

இசுக தலைவர் பண்டாரநாயக்கா ஒரு சில மாக்சியக் கட்சிகளுடன் கூட்டிணைந்து மகாஜன எக்சத் பெரமுன என்ற கூட்டமைப்பைத் தோற்றுவித்து அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார்.

முடிவுகள்

எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. பண்டாரநாயக்கா பிரதமர் ஆனார். 1956 ஏபரல் 12 இல் பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்றது.

கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் % இடங்கள்
  மகாஜன எக்சத் பெரமுன 60 1,046,277 39.52 51
  லங்கா சமசமாஜக் கட்சி 21 274,204 10.36 14
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 14 142,758 5.39 10
  ஐக்கிய தேசியக் கட்சி 76 738,810 27.91 8
  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 9 119,715 4.52 3
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1 8,914 0.34 1
ஏனையோர் 68 316,569 11.96 8
செல்லுபடியான வாக்குகள் 249 2,647,247 100.00 95
நிராகரிக்கப்பட்டவை
பதிவான மொத்த வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள்1 2,391,538
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 3,464,159
Turnout 69.12%
மூலம்: Sri Lanka Statistics
1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இத்தேர்தலின் போது இலங்கை சுதந்திரக் கட்சியினரின் சிங்கள தேசியவாதப் பரப்புரைகள் சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது நிகழ்வாகக் கருதப்பட்டது.

மேற்கோள்கள்

  • "Result of Parliamentary General Election 1956" (PDF). Department of Elections, Sri Lanka.
  • "1956 General Election Results". LankaNewspapers.com.
  • "Table 33 Parliament Election (1956)". Sri Lanka Statistics. 10 February 2009.
  • Rajasingham, K. T. (24 November 2001). "Chapter 16: 'Honorable wounds of war'". Sri Lanka: The Untold Story. Asia Times.