ரோகண விஜயவீர: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: tr:Rohana Wijeweera
வரிசை 13: வரிசை 13:
[[பகுப்பு:இலங்கை புரட்சியாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கை புரட்சியாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:1989 இறப்புகள்]]


[[en:Rohana Wijeweera]]
[[en:Rohana Wijeweera]]

09:16, 2 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ரோகண விஜயவீர

ரோகண விஜயவீர (ஜூலை 14, 1943 - நவம்பர் 13, 1989) ஒரு சோசலிசப் புரட்சியாளர். இலங்கையின் தீவிரவாத இயக்கமாக இருந்த ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை அமைத்து அதன் தலைவராக இருந்தவர். பொலிவியாவின் புரட்சியாளரான சே குவேராவின் வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர். இவரது கம்யூனிசக் கொள்கைகள் இலங்கையின் வறிய மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் தென் மாகாணத்தில் கொட்டேகொட என்னும் மீன்பிடிக் கிராமமொன்றில் பிரெஞ்சுப் புரட்சி நினைவு நாள் ஒன்றில் (ஜூலை 14) பிறந்தவர் ரோகண. இவரது தந்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்தவராக இருந்தவர். கலாநிதி எஸ். ஏ. விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய தோழராக இருந்தவர்.

உயர் கல்வி

பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் உயர்கல்வி பெற மொஸ்கோ சென்றார். அங்கு மருத்துவத்துடன் மார்க்சிசக் கொள்கைகளைத் தீவிரமாகக் கற்க ஆரம்பித்தார். அத்துடன் சோவியத் ஒன்றியத்தில் அக்காலத்தில் நிலவிய சோசலிசம் உண்மையான பொதுவுடமைக் கொள்கைகளுக்கு ஏற்பானதாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் 1964 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகண_விஜயவீர&oldid=915372" இலிருந்து மீள்விக்கப்பட்டது