"லூர்து அன்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
==லூர்து பேராலயம்==
 
[[பெர்னதெத் சுபீரு|பெர்னதெத்]] மரியாவின் காட்சிகளை கண்ட நாட்களிலேயே, லூர்து காட்சிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணியைத் [[கத்தோலிக்க திருச்சபை|திருச்சபை]] அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் 1858 நவம்பர் 17ந்தேதி, காட்சிகளைப் பற்றி ஆராய விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இறுதியாக 1862 ஜனவரி 18ந்தேதி, டர்பெஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ், "பெர்னதெத் சூபிரூசுக்கு [[மரியாள் (இயேசுவின் தாய்)|கன்னி மரியா]] காட்சி அளித்தபோது, இயற்கைக்கு மேற்பட்ட இறைவனின் செயல்பாடுகள் நிகழ்ந்தது உண்மையே" என்று அறிவித்தார்.<ref name="encounters">[http://www.lourdes-france.org/index.php?goto_centre=ru&contexte=en&id=417&id_rubrique=417# Lourdes France: The encounters with the Blessed Virgin Mary]</ref> [[திருத்தந்தை]] [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|9ம் பயஸ்]], லூர்து அன்னையின் வணக்கத்திற்கு அனுமதி வழங்கினார். இதன் மூலம் [[லூர்து]] நகர் அன்னை மரியாவின், திருப்பயணிகள்பக்தர்கள் வந்து செல்லும் புனித இடமாக மாறியது.
 
அதன் பிறகு அன்னை மரியா காட்சி அளித்த மசபியேல் குகையின் அருகே, மரியாவின் பெயரில் பெரிய ஆலயம் ஒன்று கட்டி எழுப்பப்பட்டது. காட்சியின்போது தோன்றிய நீரூற்றும், பெரிய ஓடையாக மாறி ஆற்றில் கலப்பதுடன், நம்பிக்கையோடு அதன் நீரைப் பருகுவோருக்கு குணமளிக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. ஆண்டுதோறும் உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான திருப்பயணிகள் லூர்து அன்னை பேராலயத்தை நாடிச் செல்கின்றனர்.
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/909214" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி