"கடல் இழுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
27 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (பகுப்பு:கடல் உயிரினம் நீக்கப்பட்டது; பகுப்பு:கடல் உயிரினங்கள் சேர்க்கப்பட்டது using [[Help:Gadget-Hot...)
 
==பண்புகள்==
சொறிமுட்டை/கடற்சொறி என்னும் உயிரினம் ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இதில் சில கடல் மேற்புரத்திலும் சில கடலின் அடிப்பகுதியிலும் வாழக்கூடியது. அதன் அளவு பல வகையாகவும், சிறிய நகக் கனுவளவுக்கும் அதே ஒரு குளிர்சாதனப்பெட்டி யளவிலும் காணப்படுகின்றன. இதன் உடல் பெரும்பாலும் ஒளியூடுருவும் தன்மையுள்ளதாகவும், சில அடர் வண்ணங்களிலும் இருக்கின்றன. இதிற் சில இப்பண்புகளையுடைத்து செவ்வூதா, மஞ்சள் மற்றும் காவி நிறங்களிலும் காணப்படுகின்றன. இதன் உடலில் அதிகப்படியான நீர்த்தன்மையும் வழவழப்புத் தன்மையும் கூடியுள்ளதால் அறிஞர்கள் இதை [[வழும்பலைவிலங்குகள்வழும்பலைவிலங்கு]]கள் பிரிவில் பகுத்துள்ளனர்.
[[படிமம்:Mike Johnston - Jelly Fish (by).jpg|thumb|right|200px|சொறிமுட்டை]]
 
[[படிமம்:Chrysaora quinquecirrha.JPG|thumb|right|200px|]]
 
இதன் உணர்கொம்புகளின் கொட்டும் தன்மை பெரும்பான்மையாக வேண்டுமென்றே இருப்பதில்லை. அதன் உடலில் காணப்படும் தூரிகைப்போன்ற அமைப்பு மேலே ஏதேனும் பட்டவுடன் சொறிமுட்டையைத் தூண்டி அதற்கு வினையான அவை கொத்துகின்றன. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையுமாகும். பெரும்பாலான நேரத்தில் மனிதர்களுக்கு இத்தாக்கம் சில ஊறுகளையும், சில வலியையும் உண்டுச்செய்கின்றன. அதிலும் கடற்சாட்டை/கடற்குளவி (Sea waspwhip) சொறிமுட்டை மனிதர்களுக்கு மூச்சடைப்பு மட்டும் ஏற்படுத்தாமல் இதயத்தையும் செயலிழக்கச் செய்து மரணத்தை விளைவிக்கூடியதாகவும் உள்ளன.
 
==வரலாறு==
சொறிமுட்டைகள் பல காலங்களிலாக அறிஞர்களால் ஆயப்பட்டு வந்தாலும் இது பெரிதும் அறிவியல் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது அக்டோபர் 2007 ஆம் ஆண்டே. அப்போதுக் கண்டுபிடிக்கப்பட்ட சொறிமுட்டையின் புதைப்படிமங்கள் அதன் வரலாறை உலகிற்கு உணர்த்தியது. அவை 205 மில்லியன் ஆண்டுகளுக்குப் பழைமையானவை என்பது அறிவியல் உலகில் வியப்பை ஏற்படுத்தியது. மேலும் இன்றும் பல அறிய புதிய வகை சொறிமீன்கள் கண்டுப்பிடித்தவன்னம் இருக்கின்றன.
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/906142" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி