பார்பேட்டா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பார்பேட்டா மாவட்டம்''' [[..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:20, 20 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

பார்பேட்டா மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்றாகும். இது அருகில் உள்ள கம்ருப் மாவட்த்தில் இருந்து, 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் பூட்டான் நாடும் கிழக்குப் பகுதியில் நல்பரி மாவட்டமும் தெற்குப் பகுதியில் கோஆல்பரா மாவட்டமும் மேற்குப் பகுதியில் கோக்ரஜ்கார் மாவட்டமும் எல்லையாக அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு பார்பேட்டா, பார்பேட்டா சாலை, சர்போக், பத்சாலா, பார்மரா, சார்தேபெரி, கால்காசியா, பவானிபூர், மற்றும் சாருபேட்டா. இந்த மாவட்டம் ஆரு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது. சர்போக், பார்பேட்டா, ஜானியா, பக்போர், சாருகேத்ரி மற்றும் சென்கா[1]

மக்கள்தொகை ஆய்வு

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் மொத்தம் 1,693,190 பேர் உள்ளனர். இங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.4 சதவிகிதம் ஆகவும், பாலின விகிதாச்சாரம் 951 ஆகவும், மக்களின் கல்வியறிவு 65.03 சதவிகிதம் ஆகவும், மக்களின் இன நெருக்க அடர்வு 632 ஆகவும் உள்ளது. [2]

மேற்கோள்கள்

  1. "List of Assembly Constituencies showing their Revenue & Election District wise break - up" (PDF). Chief Electoral Officer, Assam website. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  2. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பேட்டா_மாவட்டம்&oldid=904117" இலிருந்து மீள்விக்கப்பட்டது