"இயந்திர மொழிபெயர்ப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,145 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
விரிவு
சி (பொறிமுறை மொழிபெயர்ப்பு, இயந்திர மொழிபெயர்ப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
(விரிவு)
'''இயந்திர மொழிபெயர்ப்பு''' அல்லது '''பொறிவழி மொழிபெயர்ப்பு''' என்பது கணினி அல்லது ஓர் இயந்திரத்தால் (பொறியால்) மாந்தர்களின் இயல்மொழி ஒன்றில் இருந்து மற்றொரு இயல்மொழிக்குத் தானியங்கியாய் மொழிபெயர்ப்பது. இன்று பெரும்பாலும் கணினிவழியாகத் தக்க மென்கலத்தைப் ( [[மென்பொருள்|மென்பொருளைப்]]) பயன்படுத்தி எழுத்துவடிவில் உள்ள உரையையோ, பேச்சையோ ஒருமொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஆகும். இது தொன்பழங்காலத்தில் இருந்து வரும் பொதுவான மொழிபெயர்ப்புக் கலையின் ஒரு கூறாகவும், தற்கால கணிப்பீட்டு மொழியியலில் (computational linguistics) ஒரு முக்கிய உள்துறையாகவும் இருக்கும் ஒரு துறை. கணினியின் துணணயால் மாந்தர்களும் சேர்ந்து உருவாக்கும் கூட்டு மொழிபெயர்ப்பு (machine-aided human translation, MAHT) என்பது போன்ற துறைகளில் இருந்து சற்று வேறுபட்ட துறை.
'''பொறிமுறை மொழிபெயர்ப்பு''' என்பது [[மென்பொருள்|மென்பொருளைப்]] பயன்படுத்தி உரையை அல்லது பேச்சை மொழிபெயர்ப்பது ஆகும். இது இன்னும் வளர்ச்சி பெற்று வரும் ஒரு தொழில் நுட்பம், எனினும் தற்போதே பல மொழிகளுக்கான பொறிமுறை மொழிபெயர்ப்பு உண்டு. கூகிழ் மொழிக் கருவிகள் [http://www.google.com/language_tools][http://www.google.com/translate_t#] பல ஐரோப்பிய மொழிகள், சீனம், கொரியன், அரேபிக், இந்தி மொழிகளுக்கு இடையே மொழி பெயர்ப்பை ஏதுவாக்கின்றது. தமிழுக்கும் மற்ற திராவிட மொழிகளுக்கு இடையேயான பொறிமுறை மொழிபெயர்ப்பு மென்பொருள்களும் உண்டு.
 
ஒரு மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் இன்னொரு மொழியில் அதே பொருள் சுட்டும் சொற்களை ஈடாக இடுவதால் மொழிபெயர்ப்பு நிறைவு தருவதாக அமைவதில்லை. ஒரு மொழியில் பல சொற்கள் சேர்ந்து அதில் முழுப்பொருள் தரும் சொற்றொடராகும் முறை மற்றொரு மொழியில் வேறு அடுக்கில் அல்லது வரன்முறையில் வந்து சொற்றொடராகும். எளிய எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் "She saw Murugan in the shop." என்னும் சொற்றொடர், தமிழில் "அவள் முருகனைக் கடையில் கண்டாள்" என்று வரும் பொழுது தமிழில் வினைச்சொலாகிய (வினைமுற்று) "கண்டாள்" என்பது ''கடைசியாக'' வருவதும், ஆங்கிலத்தில் saw என்னும் வினைச்சொல் இரண்டாவதாக வருவதையும் பார்க்கலாம். தமிழில் "முருகனை" என்று இரண்டாம் வேற்றுமையாகிய ஐ என்பதைச் சேர்த்தும், "in the shop" என்பது தமிழில் மாற்றப்பெறும்பொழுது, "கடையில்" என்று தமிழின் ஏழாம் வேற்றுமையாகிய "இல்" என்பதைக் "கடை" என்பதோடு சேர்த்து மொழி பெயர்க்க வேண்டும். இவ்வாறான மாற்றங்களைத் தானியங்கியாய் இடத்திற்கு ஏற்றவாறு பொருள் மாறுபடாமல் ஓர் இயந்திரத்தால் அல்லது கணினியால் செய்வது இயந்திர மொழிபெயர்ப்பாகும்.
 
 
[[பகுப்பு:மொழியியல்]]
20,786

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/904024" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி