"திணிவு மையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[Image:Triangle.Centroid.svg|thumb|right|முக்கோணத்தின் திணிவு மையம்]]
[[வடிவவியல்|வடிவவியலில்]] ஒரு தளவுருவத்தின் அல்லது இருபரிமாண வடிவம் ''X'' -ன் '''திணிவு மையம்'''(''centroid''), '''வடிவுசார் மையம்'''('''geometric center''') அல்லது '''பொருள்-நிறைஈர்ப்பு மையம்'''(''barycenter'') என்பது, அவ்வடிவத்தை சம விலக்களவு(moment) கொண்ட இரு பகுதிகளாகப் பிரிக்கும் [[கோடு]]கள் அனைத்தும் வெட்டிக்கொள்ளும் [[புள்ளி]]யாகும். சாதாரணமாக, திணிவு மையத்தை ''X'' -லுள்ள அனைத்துப் புள்ளிகளின் [[சராசரி]]யாகக் கருதலாம். திணிவு மையத்தின் இந்த இருபரிமாண [[வரையறை]]யை ''n'' -பரிமாணத்திற்கும் நீட்டிக்கலாம். ''n'' -பரிமாணத்திலுள்ள ஒரு பொருள் ''X'' -ன் திணிவுமையம் என்பது, அதனை சம விலக்களவு கொண்ட இரு பாகங்களாகப் பிரிக்கும் [[மீத்தளம்|மீத்தளங்கள்]] (hyperplane) வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும்
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], திணிவு மையம் என்பது ஒரு பொருளினுடைய வடிவத்தின் வடிவுசார் மையத்தைக் குறிக்கிறது. ஆனால் பொருள்-நிறைஈர்ப்பு மையம் என்பது, அது பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து, வடிவுசார் மையத்தை மட்டுமல்லாது [[பொருண்மைநிறை மையம்]](center of mass) அல்லது [[ஈர்ப்புபுவியீர்ப்பு மையம்|ஈர்ப்புபுவியீர்ப்பு மையத்தையும்]](center of gravity) குறிக்கலாம். சாதாரணமாக, ஒரு பொருளின் பொருண்மைநிறை மையம் (மற்றும் சீரான ஈர்ப்பு மண்டலத்தின் ஈர்ப்புபுவியீர்ப்பு மையம்) என்பது, அப்பொருளிலுள்ள அனைத்துப் புள்ளிகளின், அண்மை [[அடர்த்தி]] அல்லது [[தன்எடை]]களால் எடையிடப்பட்ட சராசரியாகும். ஒரு பொருளின் அடர்த்தி சீரானதாக இருக்குமானால் அப்பொருளின் பொருண்மைநிறை மையமும் அப்பொருளின் வடிவத்தின் திணிவு மையமும் ஒன்றாக இருக்கும்.
 
[[புவியியல்|புவியியலில்]] [[பூமி]]யின் மேற்பரப்பு மண்டலம் ஒன்று, அம்மேற்பரப்பின் மீதே [[ஆரை]]ப்போக்கில் வீழ்த்தப்பட்ட நிலையில் அதன் திணிவு மையமானது, அம்மேற்பரப்பின் [[புவியியல் மையம்]] என அழைக்கப்படுகிறது.
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/870629" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி